ஞாயிறு, 25 டிசம்பர், 2016

சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் 7.6 An earthquake with magnitude 7.6 occurred 39km SSW of Puerto Quellon, Chile

சான்டியாகோ: சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 7.7 ரிக்டராக பதிவாகியுள்ளது. தெற்கு சிலியில் உள்ள பியூர்டோ மான்ட்டுக்கு தென் மேற்கே 1240 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்குக் கீழே 15 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சேத விவரம் குறித்துத் தெரியவில்லை. லாஸ் லாகோஸ் பகுதி முழுவதும் கடலோரத்தில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த சிலி தேசிய அவசர நிலை துறை உத்தரவிட்டுள்ளது. பயோபியோ, அரகசினா, லாஸ் ரியோஸ், அய்சன் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனற். இந்த நிலநடுக்கம் காரணமாக 3 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இருந்த பகுதிக்கு அருகில் உள்ள குல்லான் என்ற நகரம்தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக தெரிகிறது.tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக