திங்கள், 19 டிசம்பர், 2016

ஜெகன் மோகன் ரெட்டியின் 749 கோடி சொத்து முடக்கம்.


சாதாரண 50 ரூபாயை திருடுபவன் 6 மாசம் சிறை தண்டனை அனுபவிக்கிறான்..கோடி கணக்கில் திருடுபவன் வழக்கு பத்து வருடங்களுக்கு மேல் நடந்து தீர்ப்பு என்பது வெறும் சப்பென்று இருக்கிறது...திருடுபவன் முதல்வராகவோ இல்லை அரசியல் கட்சிக்கு தலைவராகவோ ஆகி விடுகிறான்..............தண்டனை கிடைப்பது இல்லை.........தமிழ்நாட்டிலும் இதே நிலை தான்
ரூ.749 கோடி சொத்து முடக்கம் ஜெகனுக்கு பின்னடைவு புதுடில்லி:ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்கு, எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அவர் மனைவி மற்றும் சிலருக்கு எதிராக, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை, அமலாக்கத்துறை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், 749 கோடி ரூபாய் சொத்துக் களை முடக்கியது அமலாக்கத் துறை. இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடை சட்ட சிறப்புக் கோர்ட்டில் நடந்து வந்தது.
ரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பு: அமலாக்கத் துறை நடத்திய விசாரணைகள், சமர்ப் பிக்கப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் பதிவுகள் உள்ளிட்டவற்றை, கோர்ட் கவனமாக பரிசீலித்தது. ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பிரதிவாதிகள், பணப்பரிமாற்ற சட்டத்தை மீறும் குற்றங்களை இழைத்தது நிரூபணமாகி உள்ளது. அமலாக்கத்துறை முடக்கிய சொத்துக்கள், குற்றச் செயல்களின் விளைவாக வாங்கப்பட்டவை என்பது, சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகி உள்ளது. எனவே, அமலாக்கத்துறையின், சொத்து முடக்க உத்தரவை, கோர்ட் உறுதி செய்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக