செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஜெ. உடல் இன்று( 6.12.2016 ) மாலை நல்லடக்கம்! ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

 முதல்வர் ஜெயலலிதா( வயது 68) இன்று(5.12.2016) இரவு 11.50 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. போயஸ்கார்டன் இல்லத்தில் முதல்வரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அங்கு சடங்கு, சம்பிரதாயங்கள் நடைபெற்ற பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. இன்று( 6.12.2016 ) செவ்வாய்க்கிழமை மாலை முதல்வரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.நக்கீரன்.in

மறைந்த தமிழக முதல்வரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் கல்லறைக்கு அருகாமையிலேயே அடக்கம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன !

முன்னாள் தமிழக முதல்வர் அவரது உடல் தற்போது அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டு இன்று மாலையே சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் தற்போது சென்னை விரைந்துள்ளனர். சென்னை செல்லும் அதிமுகவினரின் அனைத்து வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து செல்ல அதிகாரப்பூர்வ மற்ற இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக