வெள்ளி, 2 டிசம்பர், 2016

சீனா-பாக். சரக்கு ரயில் சேவை .. 500 டன் பொருட்களுடன் சீனாவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் கராச்சியை அடைந்தது


இஸ்லாபாத்: சீனா-பாகிஸ்தான் இடையே நேற்று முதல் முறையாக சரக்கு ரயில் சேவை துவங்கியது. சீனாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. சீனாவும்-பாகிஸ்தானும் கடல்சார் வர்த்தகத்தை ஏற்படுத்தும் விதமாக சீன-பாக்.பொருளாதார பாதை திட்டத்தை (சி.பி.இ.சி) செயல்படுத்தி வருகின்றன.500 டன் பொருட்கள்.இந்நிலையில் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக ரயில் சேவையை துவக்கியுள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே சரக்கு ரயில் சேவை . சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள கன்மிங் நகருக்கும், பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்திற்கும் இடையே நேற்று துவங்கியது. 500 டன் பொருட்களுடன் கன்மிங் நகரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் பாகிஸ்தானின் கராச்சி நகர் வந்தடைந்தது. இதன் மூலம் சீனாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி வருவதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக