புதன், 7 டிசம்பர், 2016

47 பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் விழுந்து நொறுங்கியது

பாகிஸ்தான் சர்வதேச விமானம் (Pakistan International Airlines)நாட்டின் வடக்கு பகுதியில் விழந்து நொறுங்கியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் சர்வதேச விமானம் (கோப்புப்படம்) சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு சென்று கொண்டிருந்த பிகே-661 என்ற விமானம் சில மணிநேரத்திற்கு முன்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்துவிட்டது என அந்த விமான சேவை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் மொத்தம் 47 பயணிகள் இ்ருந்தனர். விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியது. அந்த இடத்துக்கு சென்று தேட ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானின் மிகப் பிரபலமான் பாப் இசை பாடகர் ஜுனைத் ஜாம்ஷெட் இந்த விமானத்தில் பயணித்தார், அவருக்கு என்ன ஆனது என்று இது வரை தெரியவில்லை. இஸ்லாமாபாத்தில் இருந்து 70 கிலோமீட்டர் வேகத்தில் (43 மைல்) வந்த அந்த விமானம், ஹேவாலியன் என்ற இடத்தில் கீழே விழந்ததாக ஒரு பிராந்திய போலிஸ் அதிகாரி ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானின் தேசிய விமானமான பிஐஏவில் ஏற்பட்ட பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக, 2006ல் நடந்த பெரிய அளவிலான விமான விபத்தில் 44 பேர் இறந்ததனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமான நிறுவனச் சேவைகள் , 2007ல் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டன. bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக