புதன், 28 டிசம்பர், 2016

மின்வாரியத்தில் 2,175 காலி பணியிடங்களை மன்னார்குடி மாபியா நிறுத்தி வைத்துள்ளது .. பேரம் இன்னும் படியலை !

மின் வாரியத்தில், ஊழியர்களை நியமிக்க, நேர்காணல் நடத்த, மன்னார்குடி குடும்பம் முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. கூடுதல் பணிச்சுமை தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. மாதந்தோறும் சராசரி யாக, 300 ஊழியர்கள் ஓய்வு பெற்று வருகின்ற னர். இதனால், மின் ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இதை யடுத்து, இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உள் ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனால், தொழில்நுட்பம் அல்லாத, 750 பதவிகளுக்கு, தேர்வர்கள் வாங்கிய, மதிப் பெண்ணை, மின் வாரியம், அக்., மாதம் வெளியிட்டது.   கோமள்வல்லியின் ஆத்மா இன்னொரு உயிரை கண்டிப்பா கொண்டு போகுங்குறாங்கள அது உண்மையா? நவீன பூலான் தேவி  மன்னார்குடி மாபியா சசி அக்கா பதவி ஏற்கும் முன்னரே கொள்ளையை ஆரம்பித்து விட்டார். மின் துறை அமைச்சர் தங்க மணிக்கு இனி திண்டாட்டம் தான். பாவம் அவர்.
அதில், முதல் கட்டமாக, சுருக்கெழுத்தர், வரைவா ளர், தணிக்கையாளர் பதவிகளுக்கு, அதிக மதிப் பெண் வாங்கியவர்களுக்கு,நவம்பர் மாத துவக்கத் தில், நேர்காணல் நடத்துவதாக,மின் வாரியம் அறிவித்தது.பின், அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் இடைத்தேர்தலால், நேர்காணலை மின் வாரியம் ஒத்திவைத்தது. தேர்தல் முடிந்த நிலையில், இம்மாதம், நேர்காணல் நடத்ததிட்டமிட்டது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மறைவால், நேர்காணலை நடத்த விடாமல், சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தினர், மின் வாரியத்துக்கு, முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது. நேர்காணல் கூடாது இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது: முதல் முறையாக, எழுத்து தேர்வு மற்றும் நேர் காணலில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதல்வ ராக இருந்த ஜெயலலிதா உத்தரவில், தேர்வு தொடர்பான பணிகள், இதுவரை வெளிப்படையாக, நேர்மை யாக நடந்து வந்தன.

ஆனால், சசிகலா குடும்பத்தினர், 'நாங்கள் கூறும் நபர்களுக்கு தான் வேலை தர வேண்டும்; அதுவரை, நேர்காணல் நடத்த கூடாது' என, அதிகாரிகளிடம் கூறிவருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'வர்தா புயல் நிவாரண பணிக ளால், நேர்காணல் தாமதமாகி வருகிறது; விரைவில் நடத்தப்படும்' என்றார்.

அரசு பணிகளில் முடிவெடுக்க அமைச்சர்களுக்கு தடை மின் வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில், ஆண்டு தோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் மார்ச் மாதத்துடன், நடப்பு நிதியாண்டு முடிவ டைய உள்ளது.

இதனால், திட்ட பணிகளை, அரசு துறைகள் முடுக்கி விட்டு உள்ளன. ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு சசிகலாவை கொண்டு வர முனைப்பு காட்டி வரும் அவரது உறவினர்கள், 'நாங்கள் கூறும் வரை, புதிய பணிகளை மேற்கொள்ள வேண் டாம்' என, அமைச்சர்களுக்கு தடை போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'நாங்கள் கூறும் வரை, 'டெண்டர்'கள் விடக் கூடாது என்றும், பணி ஆணை தொடர்பாக முடிவு எடுக்கக் கூடாது என்றும், அமைச்சர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தங்களுக்கு நெருக்கமான, உயர் அதிகாரி வழியாக, அனைத்து துறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர். இதனால், அதிகாரிகள், கோப்புகளை பார்க்காமல் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர்
மின் வாரிய ஊழியர் நியமனத்திற்கு சசிகலா குடும்பம் முட்டுக்கட்டை  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக