செவ்வாய், 13 டிசம்பர், 2016

வர்தா புயல் ...மீனம்பாக்கத்தில் 18 செமீ; செம்பரம்பாக்கத்தில் 16 செ.மீ; நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழை

வர்தா புயல் சென்னையில் 3 பகுதிகளாக தாக்கியது. இப்புயலால் சென்னை மீனம்பாக்கத்தில் 18 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. By: Mathi
சென்னை:; வர்தா புயலால் சென்னை மீனம்பாக்கத்தில் 18 செ.மீ. மழை கொட்டியுள்ளது. மேலும் சில மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வர்தா புயல் மேற்கு பகுதி, மையப் பகுதி, கிழக்குப் பகுதி என 3 கட்டங்களாக இன்று பகல் முழுவதும் சென்னையைத் தாக்கியது. இப்புயல் கரையை கடந்த போது உச்சகட்டமாக 190 கிமீ வேகத்துக்கும் காற்று வீசியது.
தற்போது வர்தா புயல் முழுமையாக கரையைக் கடந்து வழுவிழக்கத் தொடங்கிவிட்டது. இந்த புயலால் சென்னை நகரில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடியவும் நீடித்தது…

பகல் முழுவதும் பேய் காற்றுடன் மிக அதிகமான கனமழை கொட்டித் தீர்த்தது. கடல் அலைகள் சுனாமி பேரலைகளாக சீறின. கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் 18 செமீ; செம்பரம்பாக்கத்தில் 16 செ.மீ; நுங்கம்பாக்கத்தில் 14 செமீ மழை பதிவாகி உள்ளன.
கடந்த 1994-ம் ஆண்டு புயலின் போது சென்னை நகரில் ஒரே நாளில் 24 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக