டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி 11.30 மணிக்கு இறந்தார் என்பது
அப்பல்லோவின் அதிகாரப்பூர்வ தகவல். ஆனால் 11 மணிக்கே ஜெயலலிதாவின்
மரணத்தால் தான் சோகமடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டிவீட்
போட்டிருப்பது குழப்பத்தைத் தருவதாக உள்ளது.
அப்படியானால் அதற்கு
முன்பாகவே ஜெயலலிதா இறந்து விட்டாரா.. அவர் இறந்து விட்டதாக ஊடகங்களில்
முன்கூட்டியே வந்த தகவல்கள உண்மைதானா.. பிறகு ஏன் 11.30 மணிக்கு முதல்வர்
இறந்தார் என்று அறிவித்தார்கள் என்பது புரியவில்லை.
;
"ஜெயலலிதா
மேட்டர்" குறித்து 6 மணிக்குத் தெரிய வரும் என்று சுப்ரமணிய சாமி ஒரு
ட்வீட் போட்டார். அதைத் தொடர்ந்து அந்த நேரத்தையொட்டி அவர் காலமாகி
விட்டதாக தந்தி டிவி (முதலில்) செய்தி ஒளிபரப்பியது. ஆனால் அடுத்த சில
நிமிடங்களில் அது மறுக்கப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை நடந்து வருவதாக
செய்தி பரவியது.
இந்த நிலையில் 11 மணிக்கு ஜெயலலிதா இரங்கல்
தெரிவித்து மெசேஜ் போடுகிறார் மோடி. அடுத்து அப்பல்லோ அறிக்கை வெளியாகிறது.
11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அது சொல்கிறது.
இதில் எது உண்மை.. உண்மையில் ஜெயலலிதா என்று, எந்த நேரத்தில் இறந்தார்.. உரியவர்கள் விளக்க வேண்டும்.. விளக்குவார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக