வியாழன், 8 டிசம்பர், 2016

ரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது: மத்திய அரசு

500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரெயில்கள்-பஸ்களில் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது: மத்திய அரசு புது டெல்லி: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் இரவு அறிவித்தார். மேலும் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் மோடி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கு சென்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர். அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் பழைய நோட்டுக்களை இப்போது டெபாசிட் மட்டும் செய்து வருகின்றனர். ரெயில், பஸ், மருத்துவமனை போன்ற அத்யாவசிய சேவைகளுக்கு பழைய நோட்டுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.


இரு ஒருபுறமிருக்க, புதிய நோட்டுகளுக்கு ஏற்ப ஏ.டி.எம்.களை சீரமைக்கும் பணியும் துரித கதியில் நடந்து வருகிறது. ஒருசில ஏடிஎம் மையங்கள் சீரமைக்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் டிசம்பர் 10-ம் தேதிக்குப் பின் பேருந்து, மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதிவரை 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக