வியாழன், 1 டிசம்பர், 2016

டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது கட்டணமாக 1 % கழிக்கப்படும் .. இதற்குத்தானே ஆசைப்பட்ட மோசடிகுமாரா?

செல்லாக்காசு அறிவிப்பை தொடர்ந்து ..
நான் பொறுப்பு வகிக்கும் கல்வி நிறுவனத்திற்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப எனது டெபிட் கார்டை பயன்படுத்தினேன் ..!
எதேச்சையாக இன்று என் Net banking ல் பார்வையிட்ட போது 1% கணக்கில் கழிந்திருக்கிறது .
(அதையும் 10 நாட்கள் கழித்து செய்திருக்கிறார்கள். உடனே செய்திருந்தால் மூன்று முறை ஏமாந்திருக்க மாட்டேன் .
எல்லாவற்றிற்கும் மெஸேஜ் அனுப்பும் வங்கி இதற்கு அனுப்பவில்லை )
மாதத்திற்கு சுமார் 72000 ரூபாய் அளவிற்கு எரிபொருள் நிரப்ப,
நாங்கள் டெபிட் கார்ட் உபயோகித்து 720 ரூபாய் எதற்கு யாருக்கு என்று தெரியாமல் தண்டமாக இழக்க வேண்டும் என்றால் ,
ஒட்டு மொத்த மக்களும் எவ்வளவு இழக்க போகிறார்கள் ..?
இதன் மூலம் யார் பலன்பெற போகிறார்கள் ..?
பொதுமக்கள் வயிற்றில் துல்லியமாக தாக்கிவிட்டு
தேச நலனுக்கு என
"நாளுக்கொரு அண்டப்புளுகு" எவ்வளவு இழப்பு என்று கொஞ்சம் கூட தெரியாமல் கேடிக்கு கூஜா தூக்கும் முட்டாள் கிழிந்த அரை டவுசர் கூட்டங்களா..முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக