வியாழன், 24 நவம்பர், 2016

இயக்குனர் சுபாஷ் காலமானார் .. இவர் பழம்பெரும் இயக்குனர் கிருஷ்ணன் ( பஞ்சு ) மகனாவார்!

SUBASH2 திரைப்பட இயக்குநர் சுபாஷ் (57) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார்.
சிறுநீரக கோளாறு மற்றும் இதயக் கோளாறு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த சுபாஷ் புதன்கிழமை காலை மரணமடைந்தார்.
பராசக்தி, ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இரட்டையரான கிருஷ்ணன்- பஞ்சு ஆகியோரில் கிருஷ்ணனின் மகன் சுபாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சத்ரியன், பவித்ரா, சுயம்வரம், 123, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 26 படங்களை இயக்கியுள்ளார்.

இவரது உடல் சென்னை கோடம்பாக்கம் கோலிலாம்மான் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மனைவி, இரு மகள்கள் உள்ளனர். வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மாயனத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக