செவ்வாய், 22 நவம்பர், 2016

ஒரே தேர்தல்: மோடி உறுதி! சீனாவும் பாகிஸ்தானும் காணும் கனவை நம்மாளு நிறைவேற்றுவார் ? மக்கழே நன்னா தூங்குங்க!


நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். நாட்டில் அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால் அதிகளவில் நிதி செலவாகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் தடைகள் ஏற்படுகின்றன. எனவே, நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். அதுகுறித்து பொது விவாதம் தேவை என பிரதமர் மோடி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில கட்சிகள் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதற்கு தேர்தல் கமி‌ஷனும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன்மூலம் ரூ.9 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். மேலும் சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைப்பது அல்லது அதிகப்படுத்துவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது. நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிகளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. இந்த எந்திரங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். இதனால் கூடுதல் செலவாகும். மேலும் எந்திரங்களை பாதுகாப்புடன் வைக்க பண்டக சாலைகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். இதனால் கூடுதல் செலவாகும் என்ற மாறுபட்ட கருத்தும் இருப்பதால் இதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக