வெள்ளி, 11 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு... மக்கள் ஆதரவுக்கு (?) பிரதமர் நன்றி..

புதுடில்லி: பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி: ரூபாய் நோட்டு வாபஸ்
குறித்து, மக்கள் தங்களது நன்றியை வங்கி அதிகாரிகளிடம் தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் பொறுமையாகவும், வரிசையாகவும் நின்று பழைய நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். பழைய பணத்தை மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் பொது மக்கள் மூத்த குடிமக்களுக்கு உதவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் தங்களது சிரமத்தை பொறுத்துக்கொண்டு பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது கேட்கும் போது, உற்சாகமளிக்கிறது. ஊழல் இல்லாத இந்தியா வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளிக்கின்றேன் எனக்கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக