ஞாயிறு, 6 நவம்பர், 2016

தீப்பொறி ஆறுமுகம் மரணம்!

திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுக ( வயது 78) உடல்நலக்குறைவினால்
இன்று( 5.11.2016) இரவு மதுரையில் காலமானார். மதுரை ஹெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள மித்ரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, திமுக அறக்கட்டளை சார்பாக முதற்கட்டமாக ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 9 மணிக்குமேல் சிகிச்சை பலனின்றி காலமானார். பெரியார், அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். பேச்சாளர் ஆறுமுகத்திற்கு தீப்பொறி என்ற அடைமொழியை வழங்கியவர் அறிஞர் அண்ணா. தீப்பொறி ஆறுமுகத்திற்கு மனைவி, மகன், மகள் உண்டு.
அரசியலில் இத்தனை பிரபலமான ஆறுமுகத்திற்கு, தனது ஒரே மகனுக்கு அரசு வேலை வாங்கிக்கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கடைசி வரை இருந்தது. மக்கள் செய்தி தொடர்பு துறையில் உதவி அதிகாரி ( ஏ.பி.ஆர்.ஓ.) பணி ஆறுமுகம் மகனுக்கு கலைஞர் மூலமாக கிடைத்துள்ளது. ஆனால் அந்த பதவியும் சிலரின் அதிகாரத்தால் வேறொருவருக்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆதங்கத்தை சுமந்த ஆறுமுகம் கடைசிவரை பலரிடமும் புலம்பிக்கொண்டே வந்துள்ளார். nakkeeran.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக