புதன், 23 நவம்பர், 2016

பறந்து பறந்து திரிவாரு, பாராளுமன்றத்துக்கு வரசொன்னா பயந்து நடுங்குவாரு, அவரு யாரு?

ராம.ராசு - கரூர்,இந்தியா : எதிர்க்கட்சிகளின் கோரிக்கை அப்படியொன்றும் தவறானது அல்ல. ஒரு அவைக்கு முக்கியமாக இருக்கவேண்டியவர் இருக்க வேண்டும் என்று கேட்பதில் அப்படியென்ன தவறானது. வெளி நாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கொண்டுவருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இப்போதைய ஆளும் கட்சி, அது முடியாமல் போகவே உள்நாட்டு கறுப்புப் பணம் என்று சொல்லி சாமானியனின் சேமிப்பை வங்கியில் முடக்கப்பட்டுள்ளதை, சாமானிய மக்களால் கேட்க முடியாது. அதை தட்டிக்கேட்கும் உரிமையும், வல்லமையும் எதிர் கட்சிகளுத்தான் உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்பது தவறானது அல்ல. இப்போது அனைத்து அரசுத் திட்டங்களுக்கும் பயன்படுத்துகின்ற ஆதார் அட்டைத் திட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தையே முடியாக்கியது அன்றைய எதிர்க்கட்சி இன்றைய ஆளும் கட்சி.அதனால் மக்களுக்கு பயன்படக்கூடிய எத்தனையோ திட்டங்கள் முடங்கிப்போனது. ஒரு நல்ல திட்டத்தை ஆதரிக்காமல்...அதையே ஆட்சிக்கு வந்தபிறகு முழுமையாக அமல்படுத்தும் இப்போதைய அரசு அன்று வரவேற்று இருக்கலாம். ஆனால் இப்போதைய நடவடிக்கை என்பது கறுப்புப் பணம் வைத்து இருப்பவர்கள் மீது அல்லாமல் மிகச் சாமானியனின் அடிப்படை வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது என்பது வங்கிகளின் காத்திருக்கும் மக்களே சாட்சியாக உள்ளார்கள்.

அனைத்து அதிகாரத்தையும் தன்னிடம் வைத்துள்ள மத்திய அரசுக்கு, புலனாய்வுத்துறையை வைத்துள்ள மத்திய அரசுக்கு, வருமான வரித்துறையை தன்னிடம் வைத்துள்ள மத்திய அரசுக்கு தனியார் கல்லூரிகளில், பள்ளிகளில் எப்படியான கல்விக் கட்டணக் கொள்ளைகள் தெரியாமல் இருக்க முடியாது. கோடிகளில் வருமானம் செலுத்துவர்களிடம் இல்லாத கறுப்புப் பணம் சாமானியனிடம் இருக்கும் என்று அவர்களின் பணத்தை வங்கிகளில் முடக்குவது, மக்களை காக்க வேண்டிய நிலையில் இருக்கின்றவர்களே, தாங்கள் சேமித்த பணத்தையே பயன்படுத்த முடியாமல் இருக்கச் செய்வது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு, அந்தப் பணம் அதிகப்படியான பணமே. அதனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சனை என்பது இருக்கப்போவது இல்லை. ஆனால் சாமானியனுக்கு அப்படியல்ல. இதோ, இத்தனைக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஆளும் கட்சியியைச் சேர்ந்தவரே 500 கோடிகளுக்கு மேல செலவு செய்து திருமணத்தை நடத்தியுள்ளார். ஆனால் சாமானிய மக்கள் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள்தான் திருமணத்தை செய்து முடிக்க வேண்டும். அதுவும் ஏகப்பட்ட நிபந்தனைகளுடன். இதையெல்லாம் சாமானியன் கேட்பது என்பது இயலாதது. ஊடகங்களும் அதை கண்டுகொள்ளாது. கறுப்புப் பணத்தனி ஒழிக்க வேண்டும்.... ஏழைகளுக்காக போன்ற கவர்ச்சியான வார்த்தைகள் ஆளும் கட்சியால் சொல்லப்படும்போது ஊடகங்கள் மிகப்பெரிதாகக் காட்டுகின்றன.
50 பேர்களுக்கு மேலாக இறந்துபோன மக்களைப்பற்றி அதிகமாக செய்தியாக்குவது இல்லை. எல்லாம் 72 மணி நேரத்தில் சரியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. இரண்டு வாரம், பிறகு மூன்று வாரங்கள்.... ஆனால் அவ்வளவு எளிதாக தீர்க்கப்படமுடியாது என்பது நடைமுறை எதார்த்தம். அப்படியான மக்கள் பிரச்சனைகளுக்காக எதிர்க்கட்சிகள் கேட்காமல் இருந்தால்தான் அது மிகப் பெரியது தவறு. எதிர்க்கட்சிகள் சரியாகவே தங்களது ஜனநாயகக் கடமையை செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்க்கு முடிவு என்பது பிரதம கையில்தான் என்பது சரியான வாதம் என்று சொன்னால் தவறாகாது.  தினமலர்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக