வியாழன், 24 நவம்பர், 2016

மோடியைப் போன்ற மோசடிப் பேர்வழியை நாடு இதுவரை பார்த்ததில்லை!

பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டால் நெல்சன் மண்டேலா என்றாலும் நம் ஆட்களுக்கு பிடிக்காமல் போய்விடும்.
Recessionஐ திறம்பட சமாளித்தும் கூட அப்படியான சலிப்புதான் மன்மோகன் சிங்கின் மேல் மக்களுக்கு இருந்தது. பற்றாக்குறைக்கு அன்னா ஹஜாரே என்ற சீசனல் ஒலிபெருக்கியும், 2ஜி போன்ற ஊதி பெரிதாக்கப்பட்ட விஷயங்களும் (மோடி ஆட்சியில் நடந்த 4ஜி பிரம்மாண்ட ஏல இழப்பும், ஆதித்யா பிர்லா ஊழலும் ஊடகங்களில் அடக்கி வாசிக்கப்படுவதை கவனிக்க) சேர்ந்து கொண்டு மோடி எனும் வெற்றுப் பையை சரக்குள்ள கனமான பையாக காட்டியது.
கெட்டிக்காரன் புழுகு எட்டுநாள் என்பது போல இன்று மோடி தன் முழு அறிவையும் நம் முன் காட்டி அவமானப்பட்டு நிற்கும் சமயம், நமக்கு மன்மோகனின் அருமை புரிகிறது.  பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பான்

இனியாவது மோடி என்பவர் மார்பு மட்டுமே கொண்ட இதயமில்லாத பிரதமர் என்பதையும், தலை மட்டுமே கொண்ட மூளை இல்லாத நிர்வாகி என்பதையும் மக்கள் புரிந்துகொண்டால் சரி.
தேசபக்தர்கள் வந்து ஒப்பாரி வைத்தால் தேசத்தின் நலனுக்காக அவர்களின் டெபிட்/க்ரெடிட் கார்டுகளை 50 நாட்கள் கேளுங்கள். ஓடிவிடுவார்கள்.முகநூல் பதிவு  டான் அசோக்

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் மக்களுக்கு எத்தனை துன்பம்? எத்தனை மரணங்கள்? இன்னும் எவ்வளவு பேர் சாக வேண்டும் என அவர் எதிர்ப்பார்க்கிறார்? இந்த அறிவிப்பு மூலம் தன் சொந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளார் மோடி.
.

சாதாரண மக்கள் மகிழ்ச்சியாக உறங்குவதாகவும், கறுப்புப் பண முதலைகள் துன்பத்தில் இருப்பதாகவும் மோடி சொல்கிறார். நாட்டில் மிகப் பெரிய கறுப்புப் பண முதலைகள் உள்ளனர். சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள 648 முதலைகளின் பெயர்ப் பட்டியல் மோடியிடம் உள்ளது. இவர்களில் துன்பத்தில் உள்ள ஒரே ஒரு கறுப்புப் பண ஆசாமியைக் காட்டுங்கள் பார்ப்போம்?
.
உண்மையிலேயே இது கறுப்புப் பணத்தின் மீதான போர்தான் என்றால் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியுள்ள ஒன்றிரண்டு பேருக்காவது நெஞ்சுவலி வந்திருக்கும். ஆனால் உண்மையில் மாரடைப்பு வந்து செத்தது யார் பார்த்தீர்களா... விவசாயிகளும், உழைப்பாளிகளும், அப்பாவி பொதுமக்களும்தான்.
.
1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கி, புதிதாக 2000 ரூபாயைக் கொண்டு வந்தால் கறுப்புப் பணம், ஊழல் எப்படி ஒழியும் என்பது எனக்குப் புரியவே இல்லை. இது கறுப்புப் பண, ஊழல் பேர்வழிகளுக்கு இன்னும் வசதிதானே!
.
புதிய 2000 நோட்டுகள் மூலம் லட்ச லட்சமாக ஏற்கெனவே ஊழல் பணம் பிடிபட்டுள்ளது. சில பெரிய மனிதர் வீடுகளில், விசேஷங்களில் கட்டுக்கட்டாக புதிய 2000 புழங்குகிறது. எனவே மோடியின் இந்தத் திட்டம் முற்றாக தோற்றுப் போன ஒன்று.
.
மோடியின் இந்த பண ஒழிப்பின் நோக்கம் என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மொத்தம் ரூ 8 லட்சம் கோடி வராக்கடன் உள்ளது. அதாவது திரும்பி வசூலிக்கவே முடியாத கடன்கள். இந்தக் கடன் அனைத்தும் சாமானிய மக்கள் பெற்றதல்ல. மிகவும் பலம் பொருந்திய கறுப்புப் பண முதலைகள் பெற்றுள்ள கடன்.
.
மோடி அரசு ஏற்கெனவே ரூ 1.14 லட்சம் கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டது. இன்னும் 7 லட்சம் கோடியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான நிதி ஆதாரமில்லை. எனவே அந்த நிதியை அப்பாவி மக்களின் பணத்தை வைத்து சரிகட்ட நடக்கும் சதிதான் இது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடியைப் போன்ற மோசடிப் பேர்வழியை நாடு இதுவரை பார்த்ததில்லை!
.
-அர்விந்த் கெஜ்ரிவால்  முகநூல் பதிவு   சுமி பி திராவிட கிளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக