வெள்ளி, 11 நவம்பர், 2016

நடிகை சபர்னா தற்கொலை ..சொந்த பந்தம் தொடரில் நடித்தவர்!

TV Actress Sabarna commits Suicide TV Actress Sabarna commits Suicide சென்னை: சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன்டிவியில் சீரியல்களில் நடித்தவர் சபர்ணா. சொந்த பந்தம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்த சபர்ணாவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவே சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். கோவையைச் சேர்ந்தவர் சபர்ணா, இவர் படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை, பூஜை உள்பட பல திரைப்படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார். காதலில் விழுந்த அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக அவரே ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.
< பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார் சபர்ணா. மதுராவயலில் வசித்து வந்த சபர்ணா இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கொலைக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக