ஞாயிறு, 6 நவம்பர், 2016

திருப்பதி ஏழுமலையான் நாமம் மாற்றம் .. ஜீயர்கள் போர்க்கொடி ... அர்ச்சகருக்கு நோட்டீஸ்!

சமணர்களின் (ஜெயினர்கள் ) நேமிநாதா தீர்த்தங்கரரின் சிலைதான் பின்பு முருகன் சிலையாக மாற்றம் பெற்று இறுதியில்  திருப்பதி வெங்கடாசலபதி என்று வழங்கப்படுகிறது என்று பலர் தற்போது கருத்து தெரிவிக்கும் தெரிவிப்பது தெரிந்ததே.
ப வடிவ நாமம்திருப்பதி: நாமம் சாற்றுவதில் காலங்காலமாக சில சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. வடகலை, தென்கலை நாமத்தில் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. வடகலை நாமம் ஆங்கில எழுத்தான் ‘யு’வடிவிலும் தென்கலை நாமம் ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவத்திலும் இருக்கும்.
வைணவர்கள் இந்த இரு வடிவ நாமத்தையும் வைத்து மிகப்பெரிய சர்ச்சையை அவ்வப்போது கிளப்புவார்கள். ஸ்ரீ ரங்கம் யானைக்கு நாமம் போடுவதில் எழுந்த தகராறு கோர்ட் வரை சென்றது. மாதம் ஒரு வடிவத்தில் யானைக்கு நாமம் போடச் சொல்லி உத்தரவிட்டார் நீதிபதி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு பாரம்பரியமாக அணிவிக்கப்படும் நாமத்தின் வடிவத்தை ‘ப’ வடிவத்தில் இருந்து ‘யு’ வடிவமாக மாற்றிய அர்ச்சகருக்கும், ‘ஒய்’ வடிவத்தில் நாமம் அணிந்த ஜீயர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏழுமலையான் நாமத்தை ப வடிவத்தில் இருந்து யு வடிவத்திற்கு மாற்றம் செய்ததாக தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாமத்தை மாற்றியது குறித்து விளக்கம் கேட்டு தேவஸ்தானம் சார்பில் தலைமை அர்ச்சகருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஏழுமலையானுக்கு அபிஷேகம் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்கள் ஒரு நிமித்திற்கு ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்யும் அளவிற்கு கூட்டம் அலைமோதும். தீபாராதனையோ, அபிஷேகமோ அப்போது செய்யப்படுவதில்லை. பிரம்மோற்சவ சமயத்தில் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுவதுண்டு.

வாரம் ஒருநாள் அபிஷேகம் மூலவர் ஏழுமலையானுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை, கோவிலுக்குள் உள்ள, தங்க கிணற்று நீரால், அபிஷேகம் நடக்கும். இதன் பின், நிஜபாத தரிசனம் முடிந்த பின், உள்கதவு மூடப்பட்டு, ஏழுமலையானுக்கு, அர்ச்சகர்கள், தனிமையில் அலங்காரம் செய்வர்.
கஸ்தூரி பச்சைக் கற்பூரம் சார்த்தி ஏழுமலையானுக்கு திருநாமம் அணிவிக்கப்படும். இந்த நாமம் அதற்கடுத்து வியாழக்கிழமை கலைக்கப்பட்டு இரண்டு கண்கள் திறந்த நிலையில் சுவாமி அருள்பாளிப்பார். நாமத்தை மாற்றிய அர்ச்சகர்

வெள்ளிக்கிழமையன்று நேற்று வழக்கம்போல நடந்த அபிஷேகத்திற்கு பிறகு பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலு என்பவர் திருநாமத்தை ஆங்கில எழுத்தான ‘யு’ வடிவில் அமைத்தாராம். இதையடுத்து தோமாலை சேவையின்போது நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்த ஜீயர்கள் நாமத்தின் வடிவம் மாற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஜீயர்கள் போர்க்கொடி
ஜீயர்கள் போர்க்கொடி நாமத்தை மாற்றியதால் இனி நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்க மாட்டோம் என்றும் போர்க்கொடி உயர்த்திய அவர்கள் கோயில் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ப வடிவ நாமம் திருப்பதியில் மூலவருக்கு எந்த வகையிலான நாமம் இடுவது என்ற பிரச்சனை ஆங்கிலேயர் காலத்தில் எழுந்தபோது, நீதிமன்றம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது. நாமத்தை ‘ஒய்’ வடிவிலோ அல்லது ‘யு’வடிவிலோ அமைக்காமல் இரண்டுக்கும் பொதுவாக தமிழ் எழுத்தான ‘ப’ வடிவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. திருப்பதி சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்ததால் தமிழ் எழுத்தான ‘ப’ வடிவில் நாமம் போட இருவரும் ஒப்புக்கொண்டனர்.

சர்ச்சை எழுந்தது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில்தான் மூலவருக்கு அணிவிக்கப்படும் திருநாமத்தை திடீரென ‘யு’வடிவில் பிரதான அர்ச்சகரான ரமணதீச்சதலு மாற்றி அமைத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நாமத்தை மாற்றியது குறித்து கோயில் துணை செயல் அலுவலர் கோதண்டராமனிடம் புகார் அளித்த அவர்கள், நடவடிக்கை எடுக்க தவறினால் தோமாலை சேவையில் ஜீயர்கள் பங்கேற்கப்போவதில்லை என்று எச்சரித்தனர்.

ஜீயர்கள் குற்றச்சாட்டு பெருமாளுக்கு நாமம் அணிவிப்பதில் இரு குழுவினருக்கு இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில் வேண்டுமென்றே இந்த நாமம் அணிவிக்கப்பட்டுள்ளதாக ஜீயர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூலவர் அறைக்குள் பேரனை அழைத்துச் சென்றது தொடர்பாக ஏற்கனவே ரமணதீச்சதலுவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மகன் சஸ்பெண்ட் கடந்த ஆண்டு மூலவரின் திருநாமத்தை ரமணதீச்சதலுவின் மகன் ‘யு’வடிவில் மாற்றியதால் அபிஷேக சேவையில் பங்கேற்க அவருக்கு 6 மாதம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கோவிலுக்குள் அவர் சென்று வர எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று நாமத்தை மாற்றி போட்டு சர்ச்சையை கிளம்பியுள்ளார் தலைமை அர்ச்சகர்.
Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக