மோடி தலைமையிலான மத்திய அரசின் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்டு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"கூலித் தொழிலாளர்கள், பாமர மக்கள் உள்பட 86 சதவீத மக்கள் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பண நடவடிக்கை மோடியின் தோல்வியை காட்டுகிறது. இது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. போதிய பணம் கையிருப்பு, திட்டமிடல் இல்லாததால் திடீரென பழைய ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி இருக்கிறது.
கோடிகணக்கில் பெறும் நிறுவனங்கள் அரசிடம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய அரசு முற்படுகிறது. ஆனால் கல்வி கற்க வங்கிகளில் கடன் வாங்கிய மாணவர்களின் கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன். பாராளுமன்றம் நடைபெறும் சூழலில் எந்த சட்டத்தின் அடிப்படையில் அறிவித்தார்.
மோடியின் கருத்துகணிப்பு ஆப்பில் அவருக்கு சாதாகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் வெளியாகி இரண்டு வாரத்தில் தீவிரவாதிகள் கையில் கிடைத்தது எப்படி. பொது மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகிறார்கள் என பிரதமர் மோடி கூறியிருப்பது மிகப்பெரிய பொய்.
இந்த கருப்பு பணத்தை ஒழிக்க புதிய பணம் கொண்டு வந்த மோடியின் திட்டமே, மக்களின் சேமிப்பை மீண்டும் வங்கிக்கே கொண்டு வந்து, தவறிழைத்த அதே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக அளிப்பதே.
உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மத்திய அரசு திணறி வருகிறது. நாடாளுமன்றத்தில் வங்கி வாசலில் இறந்த மக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மரணத்தை குறித்த ஒரு நிமிட மவுன அஞ்சலி கூட மோடி செலுத்தாதது கண்டிக்கத்தக்கது.
பொது மக்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கிறார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார் நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக