புதன், 9 நவம்பர், 2016

கருப்பு பணமுதலைகள் எல்லாம் திடீரென்று ரூபாய் நோட்டு செல்லாததை வரவேற்கிறார்கள் ..

கருப்பு பணம் என்பது 500, 1000 ரூபாய் தானா? டாட்டாவும், அம்பானியும், அதானியும், அரசியல்வாதிகளும் கருப்பு பணத்தில் வாங்கி குவித்த நிலம், பெட்ரோல், கட்டிடம், வாகனம், தொழிற்ச்சாலை சொத்துகளை செல்லாது ன்னு சொல்ல மோடி அரசாங்கத்திற்கு வக்கிருக்கா? 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை ஒழித்துவிட்டால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் வெளியே வருவார்கள் என்றால் உண்மையில் டாட்டாக்களும், அம்பானிகளும் தானே இந்நேரம் தலையில் துண்டை போட்டு கொண்டு வங்கி வாசலில் பணத்தை மாற்றவதற்காக காத்துக்கிடக்க வேண்டும். ஆனால் இப்போது வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்பது யார் ? நாம்தானே. யாரிடமெல்லாம் கருப்பு பணம் புழங்குகிறது என்று வெகுசன மக்களே யூகித்து அல்லது உறுதிபட சொல்லுகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்கவோ, சட்டப்படி தண்டிக்கவோ ஏன் இந்த அரசாங்கத்தால் முடியவில்லை? தலைமறைவான நிழல் உலக தாதா தாவூத்தை இந்தோனேசியாவில் போய் நமது சிபிஐ அதிகாரிகள் பிடித்து வந்தார்களே? ஏன் உள்நாட்டிலுள்ள கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. காரணம் அவர்கள்தான் மோடிக்களையும் சோனியாக்களையும் உருவாக்குகிறார்கள் அல்லது இயக்குகிறார்கள். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் கருப்பு பணம் வைத்திருக்கும் சுமார் 1000 பேரை பிடிக்க திராணியில்லை என்றால், இந்த நாட்டில் எதற்க்காக காவல்துறை, ராணுவம், லஞ்சஒழிப்பு துறை, வருமானவரித்துறை, சுங்கத்துறை, புலனாய்வுத்துறை, உளவுத்துறை, நீதித்துறை ?
அத்தனை துறைகளும் நம் வரிப்பணத்தியில்தானே இயங்குகிறது. பிறகு நாம் எதற்கு செயல்படாத அல்லது பயன்படாத இந்த துறைகளுக்கான வரிகட்டணும்? புதிதாக அச்சடிக்கப்படும் 2000 ரூபாய் நோட்டுகளில் உள்ள சிப்புகளே (Chip) கருப்பு பணத்தை காட்டிக் கொடுத்துவிடும் என்றால் எதற்க்காக நமக்கு இந்த துறைகள்? அதானியின் ஹெலிகாப்ட்டரில் பறக்கும் மோடி, அதானிகளுக்கு ஒருபோதும் கெடுதல் செய்ய மாட்டார் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்? 500 அல்லது 1000 ரூபாய்களை வங்கியில் அல்லது பெட்ரோல் பல்குகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ஏன் வங்கிகள் மூடிய பிறகு அறிவிக்க வேண்டும்? அப்படியென்றால் பெட்ரோல் பல்குகளை வைத்திருக்கும் அம்பானிகளுக்கு நம் பணம் போய் சேர வேண்டுமென்று திட்டம் போடுகிறார்க்ளோ. இவ்வாறெல்லாம் யோசிக்காமல், எல்லாம் நாட்டு வளர்ச்சிக்குத்தான் செய்றாங்க. நாம பேசாம இருப்போம்ன்னு எல்லாவற்றையும் கடந்து செல்லும் போக்கானது ஒரு தற்கொலை முயற்சியே. அதற்காக வீதியில் இறங்கி போராடவெல்லாம் வேணாம். மாத்தி யோசிக்கவோ, சிந்திக்கவோ மாட்டோமென்றால் என்னதான் செய்வது ? முகநூல் பதிவு Bala Murugan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக