ஞாயிறு, 20 நவம்பர், 2016

நிர்மலா சீதாராமன் :மத்திய அரசு மக்களுக்கு எதிரானதல்ல..



ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மக்களுக்கு எதிரானது அல்ல. இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துவருகிறது என்று, மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அதேநேரம், குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்களின் நலனுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். எந்த அரசும் அவ்வாறு செய்யாது. அவ்வாறு மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டு, வாக்கு கேட்பதற்காக அவர்களிடம் எப்படிச் செல்ல முடியும்? இந்த விவகாரத்தில், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இது தேவையற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது தங்கள் தரப்பில் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்பதை உணர்ந்த காங்கிரஸ், பிரதமர் மோடி ஆஜராக வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டது’ என்று அவர் தெரிவித்தார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக