செவ்வாய், 1 நவம்பர், 2016

அர்னாப் கோஸ்வாமி ராஜினாமா!.. பாஜகவின் முழுநேர அரசியல்வாதியாக புரமோசன்?

minnambalam.com/ பிரபல செய்தி தொகுப்பாளரான அர்னாப் கோஸ்வாமி தனது
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் மற்றும் எகனாமிக் டைம்ஸ் நவ்-ன் தலைவராகவும், தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டுவந்த அர்னாப் கோஸ்வாமி இன்று நடத்த கூட்டத்தில், தான் பதவி விலகுவது குறித்து அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள அர்னாப், புதிய சேனல் ஒன்றை துவங்கும் முயற்சியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ’தி குயின்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அர்னாப் கோஸ்வாமி தனது பதவி விலகல் குறித்து டெல்லியில் உள்ள டைம்ஸ் நவ் அலுவலகத்தில் இன்று நடந்த கூட்டத்தில் தெரிவித்தாகவும் டெல்லியில் உள்ள ஊழியர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தனது பதவி விலகல் குறித்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இன்று டைம்ஸ் நவ் சேனலில் நடக்க உள்ள "The NewsHour " நிகழ்ச்சியே டைம்ஸ் நவ்வில் அர்னாப் கோஸ்வாமி பங்கேற்கும் இறுதி நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக