வியாழன், 10 நவம்பர், 2016

யார் இந்த பெண் இதை யார் புகைப்படம் எடுத்தது,,

women
பெண் ஒருவர் கிட்ட தட்ட 20 லட்சம் ரூபாய் 2000 நோட்டின் கட்டை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்பட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. வங்கிகள் மூடப்பட்ட நிலையில் , ATM கள் திறக்கப்படாத நிலையில் இவரிடம் எப்படி 2000 ரூபாய் நோட்டு கட்டு வந்தது என தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த பெண் யார் , இவர் வங்கி ஊழியரா , வங்கி ஊழியராக இருந்தால் புகைப்படம் எடுத்து வெளியிட இவருக்கு யார் அனுமதி கொடுத்தது, இவ்வாறு செய்ய அனுமதி உள்ளதா , வேலைக்கு உலை வைக்கும் செயலை அரசு ஊழியர்கள் செய்வார்களா , உண்மையில் இதன் நிலை என்ன அரசு விவகாரங்களை வெளியிடும் செயல் நாட்டிற்கு உகந்ததா , பாதுகாப்புகள் எந்த அளவிற்கு உள்ளது என்ற பல்வேறு கேள்விகளை இது எழுப்பியுள்ளது
புகைப்படத்தை ஆய்வு செய்கையில் இந்த பணக் கட்டு டெல்லியில் உள்ள Jhandewalan என்ற பகுதியில் உள்ள RBI யின் பணம் பாதுகாக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணக் கட்டு என தெரியவந்துள்ளது. எனினும் இந்த பெண் மணி யார் , அநத இடத்தில் பணி புரிபவரா  இந்த பணக் கட்டை அவர் எப்படி எடுத்தார் இந்த பணக்கட்டை அவர் வைத்துக் கொண்டிருக்கும் இடம் எது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக