சனி, 26 நவம்பர், 2016

கனிமொழி : திமுக , அதிமுகவை குறை கூறும் தகுதி பாஜகவுக்கு கிடையாது!

 Kanimozhi Accusation on bjp சென்னை: அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு திமுக, அதிமுகவை குறைகூற தகுதியில்லை என மாநிலங்களவை திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடும் அமளி நிலவி வருகிறது. இந்த பிரச்சனையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே என தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளின் போராட்ட காலம் வெவ்வேறாக இருந்தாலும் நிலைப்பாடு ஒன்று தான் எனவும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி - மு.க.ஸ்டாலின் தமிழர்கள் பிரச்சனையில் திமுக, அதிமுக நிலைப்பாடுகள் ஒன்றுதான் என கூறிய அவர், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி மரியாதை நிமித்தமாக விசாரித்ததாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை பாஜகதான் கொண்டுள்ளதாகவும், அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு திமுக, அதிமுகவை குறைகூறும் தகுதியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக