சனி, 12 நவம்பர், 2016

மோடி என்ன பெரிய பருப்பா ? மக்கள் கருத்துக்கள் !

இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.காசேதான் கடவுளப்பா
அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமப்பா…
 
...காசுதான் எல்லாமுன்னு அந்த கடவுளுக்கே தெரியும் போது மோடிக்கு தெரியாம இருக்குன்னா அவரு எப்பேர்பட்ட முட்டாளா இருந்துருக்கனும். நியாயமா பாத்தா மோடி மேலதான் இந்த கோபம் வந்துருக்கனும். நமக்கு மட்டும்தான் இந்த கோபம் வருதோன்னு தோணவே வங்கிக்கு வந்தவங்கக்கிட்டையும் பேசி பாத்தேன்.; இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.
சென்னையோட முக்கியமான இடத்துல இருக்கும் அந்த ஸ்டேட் பேங்கு வாசல்ல புதுசா மாத்துன பணத்தோட பத்துபேர் நின்னாங்க. அவங்கள்ட்ட பேசுனோம்.

நாங்க ஜாபர்கான் போட்டையிலேருந்து வர்ரோம். பையனுக்கு வர ஞாயித்து கிழமை கல்யாணம் வச்சுருக்கோம். தாலி, பட்டுபுடவை வேஷ்டி, மத்த துணிமணி, மண்டபத்துக்கு, மளிகை சாமான் எதுக்குமே பணம் இல்ல. யாருகிட்ட கடன் கேக்க முடியும். அப்படியே குடுத்தாலும் நூறு நூறாவா குடுப்பான். செலவுக்கு வேணுமேன்னு இருந்த பணத்த எல்லாம் எடுத்துட்டோம். வாங்குற பொருளுக்கு கார்டு (டெபிட்கார்ட்) தேச்சு பணம் கொடுக்கவும் முடியாது. டெபாசிட் பண்ணினாலும் 4 ஆயிரம்தான் கொடுப்பான். எப்படி யோசிச்சாலும் மண்ட கொழம்புது. கல்யாண வேலை அப்படியே தேங்கி போயி நிக்குது.
இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் ஒரு முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க எல்லாரும் சேந்து அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க. திரும்பவும் வரிசைல நிக்கலாமா இல்ல வேற பேங்குக்கு போகலாமான்னு யோசிச்சோம் ஒருத்தர் ஒரு நாளைக்குதான் பணம் எடுக்கலாமுன்னு சொல்லிக்குறாங்க. அதான் நாளைக்கு வரலாமான்னு பேசிட்டு இருக்கோம்.” என்றார்.
கட்டிட தொழிலாளி ஒருவர் “நேத்து ஒரு நாள் பொறி கலங்கி போனாப்போல போச்சு. நானு கட்டட தொழிலாளிங்க. வேலை முடிஞ்சு கூலி வாங்கிட்டு வந்த பணம் வீட்டுக்கு வந்ததும் செல்லாதுன்னா எப்படி இருக்கும் சொல்லுங்க. சத்தியமா நேத்து ஒரு ரூபா கிடையாது. இன்னைக்கு வரைக்கும் எதுவுமே வாங்கல. பிள்ளைகள வச்சுகிட்டு பால் கூட வாங்க முடியாம வெறும் வறடீதான் குடிச்சோம்.” என்றார்
காலை வேலையின் பரபரப்பினால் அடங்காத வேர்வையோட, வாரப்படாத தலையுமா, அள்ளி சொறுகிய சேலையுமா பணம் செல்லுமா செல்லாத என்ற பெரும் பேச்சுடன் அதே வளாகத்துக்குள் இருந்த ரேசன் கடையில நின்றது பெண்கள் கூட்டம்.
சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை
சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை
“வாங்குனா சில்லறை கொடுக்கனுமே அதுக்கு அவங்க எங்க போவாங்க.” என்றார் ஒருவர்.
“அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு பிறகு செல்லாதுன்னு சொல்லிருக்கனும்.”
“பத்து நாளையில நம்ம நெலமை சரியாகிடும். பணக்காரன் பாடுதான் திண்டாட்டம். வச்சுருக்க பணத்துக்கு வரி கட்டியாகனும். அப்படி பதுக்கி வச்சுருக்கப் பணத்த ஒழிக்கதாங்க இதெல்லாம்.”
“அப்படியே நேர்மையா கட்டிடகிட்டிட போறானுங்க”
“ஒருத்தர் கிட்ட 100 கோடி பணம் இருக்குன்னு வச்சுக்குங்க. பேங்கல கொண்டந்து போட்டா வருமான வரி கட்டித்தான் ஆகனும் ஏமாத்தவே முடியாது”
“ஒருத்தரால எவ்வளவு பணம் வரி இல்லாம மாத்த முடியுமோ அதுக்கு ஆளு ஒன்னுக்கு இவ்வளவு கமிஷன் தாரேன்னா நானும் போவேன் நீயும் போவே. ஒன்னையும் என்னையும் ஏற்பாடு பண்ணித் தர ஆளு இருக்கும். ரேசன் சாமான் வாங்க 150 பணத்துக்கு என்ன செய்றதுன்னு முழிச்சுட்டு இருக்கவங்க கிட்ட பதுக்கி வைக்கிறதுக்கு ஏது பணம். பணக்காரன் மண்ணு, மனையா வச்சுருப்பானே தவிர பணமா எதுக்கு வச்சுருக்கான்” என்று நீண்டது அந்த விவாதம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில கூட்டம் சரவணபவன் ஹோட்டலையும் தாண்டி நின்னுச்சு. வரிசையின் நீளத்தைப் பாத்தா நமக்கு பணம் கிடைக்குமோ என்ற அச்சம் எல்லார் முகத்துலையும் தெரிஞ்சது. இந்த பேங்குல மாத்திரலாமா அந்த பேங்குல மாத்திரலாமான்னு நாலு எடத்துக்கு மாறி மாறி அலைஞ்சோம். நாங்க மட்டுந்தான் அப்படின்னு பாத்தா நின்னவங்கல்ல பாதி பேரு அப்படிதான்னு அப்புறந்தான் தெரிஞ்சது.
“இன்னைக்கே எனக்கு அவசரமா 50,000 ஆயிரம் பணம் வேணும். சரக்கு வந்து மூணு நாளாச்சு. இன்னைக்கு பார்சல எடுக்கலன்னா திருப்பி அனுப்பிருவானுங்க. அக்கவுண்டுல பணம் இருந்தும் எடுக்க முடியல. எடுத்தாலும் வெறும் 4 ஆயிரத்த வச்சுகிட்டு நாக்கா வழிக்க முடியும். யாருகிட்டயும் உதவியும் கேக்க முடியாது. மானங்கெட்ட அரசாங்கத்தை நம்பி எப்படி தொழில் செய்றது.” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு.
உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு – மோடிக்கு ஆதரவாக வெடித்த ஒரு பார்ப்பனர் (காவி சட்டைக்காரர்)
அதே வரிசையில் பட்டையும் பூணூலுமாக ஒரு பெரியவர் கோபத்தோட பேசியனார். அவருக்கு முன்னால் யாரும் வரிசையில புகுந்துட்டாங்களா என்று விசாரிச்சா கருத்து சுதந்திரம் இல்லன்னாரு.
“வச்சுருக்க பணத்தை டிசம்பர் கடைசி தேதிக்குள்ள மாத்திக்கனும், இல்ல ரிசர்வ் வங்கியல போதுமான ஆவணங்கல கொடுத்து பழய பணத்தப் புது பணமா மாத்திக்கனும். இப்படிதான் பேப்பர்ல போட்டுருக்கு. இவரு (முன்னாடி இருப்பவர்.) நல்லா பேப்பர படிச்சு பாருங்க ரிசர்வ் வங்கி கிளைகள்ளையும் மாத்திக்கலாம்னு போட்டுருக்குன்னு சொல்லிட்டு, அரசாங்கத்தையும் திட்றாரு.
எனக்கு விசயம் தெரியாதுன்னு நெனச்சு பேசுராரு. உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு. ஆனா மம்தா, மோடியோட முடிவு தவறுன்னு சொல்லிருக்கா அவள நிக்க வச்சு சுடனும். எது பேசவும் கருத்து சுதந்திரமே இல்லாம போச்சும்மா” என்றார். விட்டா அவரு உடனே போய் சுட்டுறுவாருன்னு தோணுச்சு. டாடா, பிர்லா, அம்பானி, அதானி வகையறாக்களெல்லாம் வெளிநாட்டுல முதலீடா பதுக்கியிருக்கிறதெல்லாம் தெரியாத அளவுக்கு அவரு அப்பாவியா? ஆனா அவரோட அதிகார தொனியா பாத்தா அப்படி தெரியல.
இதையெல்லாம் வேடிக்கை பாத்துட்டு இருந்த சரவணபவன் ஊழியரிடம் பணப் பிரச்சனையில் வியாபாரம் எப்படி இருக்கு என பேச்சு கொடுத்தோம்.
“நீங்களே சொல்லிட்டிங்க பணம் பிரச்சனைன்னு பிறகு வியாபாரம் எப்படின்னா என்னத்த சொல்றது. நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம். இருந்தும் யாரும் வரல, நாங்கதான் சாப்பிட்டோம். வியாபாரம் பாதிக்குமே சரி பேங்குல மாத்திக்கலான்னு வாங்குனா அதுக்கும் சேத்து வருமான வரி கட்றது யாரு.
நானுமே பிரச்சனையில மாட்டிகிட்டேன். வீடு கட்ற செலவுக்கு வேணுமேன்னு தீபாவளி அன்னைக்கிதான் 2 லட்சத்துக்கு நகைய வித்துட்டு பணமா வச்சிருந்தேன். பணம் செல்லாதுன்னதும் நகை விலை பவுனுக்கு 2 ஆயிரம் ஏறி போச்சு. இப்ப வித்து இருக்கலாமேன்னு வருத்தப்படுறதா? இல்ல இருக்குற பணத்த முழுசா மாத்த முடியுமான்னு கவலப்படுறதா சொல்லுங்க” என்றார்.
நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம்.
நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம் – சரவணபவன் ஊழியர்.
மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண், “பணம் செல்லாதுன்னு தெரிஞ்சப்ப விடிஞ்சு செலவு பன்ன 110 ரூபாய தவிர காசு கெடையாது. காலையில காலேஜ் பேற பிள்ளைக்கு பஸ்சு டிக்கட்டுக்கு என்ன பன்றது.  குழு பணம் வங்கியில போட எங்க உறுப்பினர்கள் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தச்சு. இருந்த ரெண்டு ஐநூருவா நோட்ட வச்சுட்டு இருந்த நூறுருவா நோட்ட எடுத்துகிட்டேன்.
ராத்திரி வெளியூருக்கு போறேன்னு இரயில்வே ஸ்டேசனுக்கு போன எங்கூட்டுக் காரரு டிக்கெட் தர மாட்டேங்குறாங்க. டிக்கெட் தந்தா சில்லறை தர மாட்டேங்கறாங்கன்னு வீட்டுக்கு திரும்பியே வந்துட்டார். அவராவது பரவால்ல போகாமையே திரும்பிட்டார். வெளியூர் காரங்க பாதி ராத்திரி ரயிலுக்காக காத்துக் கெடந்தவங்க நெலம ரெம்ப மோசம்னாரு. குழந்தைங்கள வச்சுகிட்டு பாலு கூட வாங்க முடியாம அவதிப் பட்டாங்களாம். மோடி செஞ்சது தப்பு ரைட்டுங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும் அர்த்த ராத்திரியில கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்போல செஞ்சுபுட்டேரே அதுதான் மனசு ஆரல.”
“பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “நேத்து வேலை முடிஞ்சு கூலி வாங்கிட்டு வரும் போது பஸ்சுல டிக்கெட்டு தரலன்னுட்டாங்க. ஐநூறுவா மாத்த ஐடி புருப் இருக்கான்னு கேக்குறான். ரேசன் கார்டு ஜெராக்ஸ்ச கொடுத்தா வாங்காம நடு வழியிலேயே எறக்கி விட்டுட்டான். எங்கூட வியாபாரம் பாக்குறவங்க பூ, பழம், காய் எல்லாமே விக்காம வீணா போச்சு. காசு இருந்தாதானே மக்களும் வாங்குவாங்க.” என்றார்.
அவர் கூட வந்தவரோ “மூனு நாளா எம்பையனுக்கு உடம்பு சரியில்லை நேத்து இருந்த இருநூறு ரூபாய டாக்டருக்கு குடுத்து வைத்தியம் பாத்துட்டேன். 700 ரூபாய்கி மருந்து எழுதிக் கொடுத்துருக்காரு. கையில இருந்த ஐநூறு செல்லாதுன்னு மருந்து தர மறுத்துட்டாங்க. காசு இருந்தும் இன்னைக்கி சாயங்காலம் வரைக்கும் மருந்து வாங்க முடியல. சுருண்டு படுத்துருக்கான் எம்பையன். இப்படி திடீர்னு ஒரு முடிவெடுத்தா மக்கள் எப்படி சிரமப்படுவாங்கன்னு கொஞ்சமாச்சு யோசிச்சி இருப்பாங்களா?
“ரொம்ப அடாவடியா இருக்குங்க, மோடி என்ன பெரிய பருப்பா (மயிர) ராத்திரியோட ராத்திரியா விடிஞ்சா பணம் செல்லாதுன்னு அவன் சௌகரியத்துக்கு ஆணவமா அறிவிச்சுட்டான். பாலு, தண்ணி எதுவும் வாங்க முடியலங்க. ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அரசுதானே அறிவிச்சுச்சு அவங்களுதுதானே கேஸ் கம்பெனி, ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன், பஸ்சு இதெல்லாம். அங்க வாங்கலாமில்ல.” என்றார் ரேசன் கடையில நாங்க சந்தித்த ஒரு பெண்.
மோடியின் திமிரை அந்தப் பெண் புரிந்துகொண்ட மாதிரி டி.வியிலயோ இல்லை பத்திரிகைகள்ள கட்டுரை எழுதற அறிஞருங்களுக்கோ தெரியல! என்ன இருந்தாலும் பாதிக்கப்பட்டது நாம இல்லையா?
– சரசம்மா, சங்கவை  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக