புதன், 16 நவம்பர், 2016

பெங்களூர் பெண்கள் மதுரை நீதிபதியிடம் பாதுகாப்பு கேட்டு மனு

மதுரை: பெற்றோர் கொலை மிரட்டல் காரணமாக பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண்கள் பாதுகாப்பு கேட்டு மதுரை நீதிபதியிடம் தஞ்சம் அடைந்தனர். பெங்களூரை சேர்ந்த ஆண்டனி என்பவரின் மகள் வெரனிகா (எ) அருண். மற்றும் காமராஜ் என்பவரின் மகள் மாலினி (19). இவர்கள் இருவரும் அங்குள்ள கல்லூரி ஒன்றில் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.  :இந்நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி பன்னீர்செல்வத்திடம் இவர்கள் ஒரு மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், நாங்கள் ஒருவருக்கொருவர் நட்பு முறையில் பழகி வந்தோம். எங்களின் கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்து வருகிறோம். அதில், எங்கள் இருவரது பெற்றோரும் எங்களை பழகக்கூடாது என்றும், மீறினால் கொலை செய்துவிடுவதாகவும், முகத்தில் ஆசிட் ஊற்றி கெடுத்துவிடுவதாகவும் தொடர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், எங்களின் பெற்றோருக்குத் தெரியாமல் நாங்கள் வீட்டை விட்டு மதுரைக்கு வந்துவிட்டோம். தற்போது, இங்குதான் வசித்து வருகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாங்கள் நட்பு முறையில் இணைந்து வாழ உரிமையுண்டு. எங்களது உறவைக் கொச்சைப்படுத்தவோ அல்லது கொலை மிரட்டல் விடவோ யாருக்கும் உரிமையில்லை. ஆகையால், எங்கள் விருப்பப்படி செயல்படவும் உயிர் வாழவும் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்' என்று tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக