செவ்வாய், 8 நவம்பர், 2016

பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள் எல்லாம் நம்பியார் காலத்து ஆட்கள் அல்ல .. ரொம்ப வெவரமான ஆட்கள்தான்

உண்மையில் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள் எல்லாம் நம்பியார் காலத்து லும் போயிருக்கும் அல்லது இங்கிருந்து ஹவாலாவில் இந்தியாவுக்கு வெளியே இந்நேரத்துக்கு போயிருக்கக் கூடும். அவை அனைத்தும் நாளைக்கு FDI என்கிறப் பெயரில் நுழையலாம். இதில் உடனடியாக பாதிக்கப்படப் போகிறவர்கள் சிறு, குறு வியாபாரிகள், சம்பளக் காரர்கள், தண்டலில் கலெக்‌ஷன் எடுப்பவர்கள், வட்டிக்கு விட காசை வைத்திருப்பவர்கள், கோயம்பேட்டில் தினமும் பல்லாயிரங்கள் கொடுத்து சரக்கு எடுப்பவர்கள். இதை என்னமோ மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பக்த கோடிகள் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்கள் போல பணத்தை பதுக்கி வைத்திருப்பார்கள் என்று நம்புவதே அபத்தம். பணம் பரவலாக எல்லா இடங்களி
இந்நேரத்துக்கு பங்களாதேஷிலோ, பாகிஸ்தானிலோ ஏன் உள்ளூரிலோ ரூ 50 / ரூ 100 தாள்கள் அடிக்க ஆரம்பித்திருப்பார்கள். இதை விட அடுத்த 2 மாதத்துக்கு இலாபகரமான தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது.
நாளை முதல் இந்தியாவின் அதிக இலாபகரமான தொழில் வங்கியில் மாற்றுவதை விட 10% கமிஷன் கொடுத்தால் ரூ.500/ரூ.1000 நோட்டுகளுக்கு ரூ.100/ரூ.50 தாள் தருவதாக தான் இருக்கும். ஸ்மார்ட்டான முதலாளிகள் இன்றைக்கே தங்களுடைய வங்கிகளில் 100/50/20/10-னை தனியாக எடுத்து வைக்க சொல்லி இருப்பார்கள்.

நாளை காலை இந்தியா ஸ்தம்பிக்கும். எல்லா கட்சிகளும் இதை எதிர்க்கும். குறிப்பாக பாஜகவின் முக்கிய ஒட்டு வங்கியான ‘பனியா’ கும்பல். இன்றைக்கு வரைக்கும் திருட்டு கணக்கு எழுதுவதில் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது. செளகார்பேட்டையில் சேட்டு வாயிலும், வயிற்றிலும் இந்நேரம் அடித்துக் கொண்டே பணம் மாற்றுவார்.
இது சட்டரீதியாக நிற்குமா என்று தெரியவில்லை. இதை எதிர்த்து வழக்கு தொடர படலாம்.
இந்த கண்டெயினர் வைத்திருப்பவர்கள் நிலை கொஞ்சம் பாவம் தான். மேலும், பல்வேறு இடங்களில் தேர்தல் செலவிற்காக பணமெடுத்து வைத்திருப்பவர்கள் நிலைமை பரிதாபம்.
இப்படியெல்லாம் நாம் பொங்கிக் கொண்டிருக்கும் போது மோடியும், முப்படை தளபதிகளும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும் ? நாம் ஏதாவது coupற்கு தயாராகிறோமா ? அல்லது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப் போகிறோமா ? எதற்காக இரண்டு மாத liquidityயை சமூகத்திலிருந்தும், சந்தையிலிருந்தும் உறிஞ்ச வேண்டும் ? இதை எப்படி ஆர்.பி. ஐ ஒத்துக் கொண்டது ?
இவை அனைத்தும் ஹேஷ்யங்கள் தான். இந்திய அரசியலமைப்பு சட்டம் வலுவானது என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது, ஆனாலும் இந்த கோஷ்டிகளை நம்ப முடியாது. இவர்கள் தங்களுடைய அதிகாரங்களைக் காத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
- நரேன் ராஜகோபாலன்
Narain Rajagopalan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக