ஞாயிறு, 13 நவம்பர், 2016

கமிஷனுக்கு பணம் மாற்றிக் கொடுக்கும் வியாபாரம் மட்டுமே சூடு பிடித்துள்ளது . நாடு கோவிந்தா?

கறுப்புப்பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க, பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் 500, 1000 நோட்டுகள் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று அவசர அறிவிப்பு செய்தார். இதனால் கறுப்புப்பணமோ, கள்ள நோட்டோ ஒழிந்து விடவில்லை. சாதாரண உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், வியபாரிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிள்ளை பெற்றவர்கள் திருமணத்தை அறிவித்துவிட்டு, வீதியில் கண்கலங்கிப் போய் நிற்கிறார்கள். கை நிறைய பணம் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாததால் பலர் இது போல் ஒரே இரவில் நிர்க்கதியாயினர். இந்நிலையில், கிடைக்கிற சமயத்தை பயன்படுத்தி பலர் பண வியாபாரத்தை படு ஜோராக செய்தனர்.
ரயிலில் பயணம் செய்பவர்கள், பணம் இருந்தும் சாப்பிட வழியில்லாமல் தவிப்பதை அறிந்து ஒரு கும்பல், ரயிலில் சுண்டல் விற்பனை செய்வதுபோல் வந்து பண வியாபாரம் செய்தனர். ரூபாய் 1000 வாங்கிக்கொண்டு ரூபாய் 250 கமிஷன் எடுத்துக்கொண்டு மீதி ரூபாய் 750 கொடுக்கிறார்கள்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பெரிய அளவில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்தியா முழுக்க, ஒரு கோடி செல்லாத பணத்தை வாங்கிக்கொண்டு நல்ல பணம் ரூபாய் 65 லட்சம் கொடுக்கிறார்கள். இந்த வியாபாரம் செய்பவர்கள் எப்படி மாற்றுவார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.
இவர்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் கும்பல் இருக்கிறது என்பதுதான் அதற்கான விடை. கறுப்புப்பணம் என்பது பதுக்கி வைத்திருப்பது அல்ல. வரியாகவும், அசட்டாகவும் வைத்திருப்பதுதான். கறுப்பை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்கும் மோடி, கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டில் ரூபாய் 11 லட்சம் கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அசட்டாக ரூபாய் பல லட்சம் கோடிக்கு பதுக்கி வைத்துள்ளது மத்தியில் ஆளக்கூடிய கட்சியும், ஆண்ட கட்சியும். அதையெல்லம் பறிமுதல் செய்யாமல் அப்பாவிகள் பாதிக்கும் அளவில் உள்ளது மோடியின் அறிவிப்பு. இதுவரை வங்கிகளில் ரூபாய் 56 ஆயிரம் கோடிதான் வந்துள்ளது, இன்னும் ரூபாய் பல லட்சம் கோடி வரவில்லையே, வரவும் வராது. அது மோடிக்கும் தெரியும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக