செவ்வாய், 29 நவம்பர், 2016

தென்னக நீதிமன்றங்களில் குண்டுவெடிப்பு .. சந்தேக நபர் கைது

தென்னிந்திய நீதிமன்றங்களில் குண்டுவெடிப்பு ;சென்னையில் முக்கிய தீவிரவாதி கைது!கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர், ஜூன் மாதம் 15-ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்திலும், ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி மைசூரிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த 3  தென்னிந்திய நீதிமன்றங்களின் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தமிழ்நாட்டைச்சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மதியம் மதுரை முனுச்சாலையை சேர்ந்த அப்பாஸ் அலி, அயூப்கான், புதூரை சேர்ந்த அப்துல்கரீம் ஆகிய மூன்று பேரையும் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.)யினர் கைது செய்தனர். இவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் அல்கொய்தாவின், இந்த குண்டுவெடிப்பு முக்கிய தீவிரவாதி தாவூத் சுலைமான்( வயது 23) என்பது தெரியவந்தது. தாவூத் சுலைமான் மதுரையைச்சேர்ந்தவர். சென்னையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இன்று மாலை 5 மணிக்கே என்.ஐ.ஏ.வினர் சுலைமானை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர். விசாரணைக்கு பின்னர் இரவு 9 மணிக்கு மேல் தாவூத் சுலைமான் கைது செய்யப்பட்டார்.t;">நக்கீரன் ,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக