வெள்ளி, 11 நவம்பர், 2016

ஆப்கானிஸ்தானில்.. ஜெர்மன் தூதரகத்தில் தலீபான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்


மாசார் ஐ சரீப்,   ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரகம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் , 2 பேர் பலியாகினர். ஜெர்மன் தூதரகத்தின் சுற்றுச்சுவர் மீது வெடி குண்டு நிரப்பிய காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியதும் அருகாமையில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 32 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆப்கான் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலமாகவும் வாகனங்கள் மூலமாகவும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் வடக்கே உள்ள குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 30-க்கும் அதிகமான தலிபான்கள் கொல்லப்பட்டாகக் கூறப்பட்டது. இதற்கு பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர் dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக