புதன், 23 நவம்பர், 2016

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா

latharani :கடந்த சனிக்கிழமை 5-11-2016 அன்று வேலூர் நகர அரங்கில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை, வேலூர் தமிழ்ச் சங்கம், திராவிடர் கழகம் , உலகதமிழ் எழுத்தாளர்கள் சங்கம், அகர முதல இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய இந்த விழாவில் வேலூர் VIT கல்லூரியின் வேந்தர் விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் அவர்களின் வரவேற்புரையுடன், பொதுச்செயலாளர் பேராசிரியர். சுபவீ அய்யா அவர்களின் சிறப்புரையும், புலவர் பதுமனார், வி. சடகோபன், மருத்துவர். தி. ச. முகமது சயி , திரு,த.வ. சிவா சுப்பிரமணியம் , திரு. சோலைநாதன் திரு பன்னிர்செல்வம் இவர்களின் கருத்துரையுடன் என்னுடைய கருத்துரையும் இடம் பெற்றது. பேரா. சுபவீ அய்யா அவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் மிகச்சிறந்த கருத்துக்களுடன் தனித்தமிழ் இயக்க வரலாற்றை எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் திரு. சிங்கராயர் அவர்கள் என்னை அனைவரிடமும் "ஆர்க்காடு பூங்காவனம் ஆசிரியரின் மகள்" என அறிமுகப் படுத்தியது மிகவும் மகிழ்வாக இருந்தது . மேலும் இந்த விழாவிற்கு என்னுடைய தம்பி நிரைஞன் மற்றும் அவர் மனைவி சங்கீதா, மேலும் என் தங்கை அவருடைய மகளுடனும் மற்றும் இன்னொரு தங்கை (சித்தப்பா மகள்) வந்திருந்தனர். மற்றும் என் அப்பாவின் மாணவர்கள் சிலர் (தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள்) நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அப்பாவின் மேடைத் தமிழ் கேட்டு ரசித்தவர்கள் நான் பேசும் தமிழ் கேட்பது மிகவும் மகிழ்வாக இருப்பதாகக் கூறினர். என் தந்தையுடன் பணியாற்றியவர் மற்றும் என் தம்பியின் நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். மிக்க மகிழ்வான மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது. சிங்கராயர் அய்யாவிற்கு என் நன்றிகள்.  latharaniyinsorchithirangal.blogspot.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக