செவ்வாய், 8 நவம்பர், 2016

இந்தியர்கள் மீது மோடி தொடுத்தார் பொருளாதாரப் போர்.. சமுக வலைதளங்களில் பொங்கி எழுந்த ...

Narain Rajagopalan : இந்த தலைமுறைக்கான எமர்ஜென்சி இன்றிரவு முதல்
இனிதே ஆரம்பிக்கிறது. 31% முட்டாள்களால் நாம் மொத்தமாய் காலியாகப் போகிறோம். தலைதலையாய் அடித்துக் கொண்டது இதற்காக தான். மோடி ஹிந்து-பாகிஸ்தானை உருவாக்கிவிட்டு தான் வெளியேறுவார் போல. முகம்மது பின் துகளக்கள் தோற்றார்கள். இந்த எழவுக்காக தான் வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

 Nather : மீதி 69% மக்களும் செறுப்பேத்துகிட்டுபோய் அடிக்கணும் அந்த தே...பசங்களை....நாட்டை கிடுச்சுவராகிட்டானுங்க ஐயோ ஐயோ....

 Manivannan Thirayan Manivannan நேத்துதான சம்பளம் வாங்குன அய்யோ , அய்யோ
Narain Rajagopalan எளிமையாக சொல்லுகிறேன். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கேஷில் வணிகம் செய்யும் ஒரு பெரும்பாலான சிறு, குறு, எளிய வியாபாரிகளுக்கு 500/1000 தான் கட்டாய் இருக்கும். அவர்கள் நாளைக்கு காலையில் “ஆதாரங்களைக்” கொடுத்து தான் மாற்ற முடியும். அதுவுமே கூட டிச. 30 தேதிக்கு பிறகு தான் சாத்தியம். அது வரை இவை வெறும் தாள்கள். உங்கள் வாழ்வாதாரம் இதுவாய் இருந்தால் முடிந்தது கதை.
Narain Rajagopalan இனிமேல் இந்த ஊர்ல கவர்ன்மெண்ட்னு ஒண்ணு இருக்குமாண்ணே சந்தேகமா இருக்கு

நாளை முதல் ரூ.500 / ரூ.1000 தாள்கள் வெறும் பேப்பர்கள். புதிய ரூ.500 / ரூ.2000 விடப்படும்.
வங்கிகள் நவ. 9 மூடப்படும்
ஏடிஎம் வித்ட்ராவல்கள் தினத்திற்கு ரூ. 10,000; வாரத்திற்கு ரூ. 20,000 மட்டுமே
ஏடிஎம்கள் நவ.9 / நவ. 10 வரை மூடப்படும்
ரூ.500 / ரூ.1000 தாள் வைத்திருப்பவர்கள் அதற்கான சான்றுகளைக் காட்டி டிசம்பர் 30க்கு பிறகு ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். மார்ச் 31, 2017 வரை இது உண்டு. ஆதார், பேன் கார்டு இதர ஆதாரங்களைக் காட்டி தாள்களை மாற்றிக் கொள்ளலாம்.
நவ. 8 நள்ளிரவிலிருந்து ரூ 500 / ரூ 1000 வெறும் பேப்பர்களே என்று இறுமாந்திருக்கிறார் நம்முடைய பிரதமர்.
சர்வாதிகார அரசில் தான் ஒவர்நைட்டில் எல்லாம் மாறும். இந்தியா இன்னொரு ஹிந்து பாகிஸ்தான் என்று முடிவு கட்டி, இதை அறிவித்த பிரதமரை நாம் இருகரம் கூப்பி வணங்குவோம்.

Abu Jasher சொந்த காசுல சூனியம் வைத்த கதைய கேள்விப்பட்டிருப்பீர்கள். சொந்த கையால, சொந்த வாயால,சொந்த செயலால சூனியத்த வச்சுக்குர கூட்டத்த மோடி பிரதமரா வந்த பிறகுதான் பார்க்க கிடைச்சுருக்கு. கருப்பு கருணா: ஒரே ஒரு 500 ரூவா இருக்கு.காலையில ஊருக்கு போறதுக்குன்னு வச்சிருந்தேன்.இப்ப இந்த நேரத்துல யாருகிட்ட கடன் கேக்குறதுன்னு முழிச்சிக்கிட்டிருக்கேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக