ஞாயிறு, 6 நவம்பர், 2016

அனுஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளுமான அனுஹாசன் விபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திரா படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அனுஹாசன் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் கிரஹாம் ஜோயை திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வசித்து வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் என்.டி.நந்தா இயக்கத்தில் வல்லதேசம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அனுஹாசன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் ஒரு காட்சி உள்ளது.
<அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எப்படியோ இணையத்தில் கசிந்து விட அனுஹாசனுக்கு உண்மையிலேயே விபத்தினால் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பலரும் நினைத்துள்ளனர்.இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அது வல்லதேசம் படத்தில் அவர் நடிக்கும் ஒரு காட்சியாகும்  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக