செவ்வாய், 1 நவம்பர், 2016

போபால் என்கவுண்டர் போலி? விடியோ ஆதாரம் எழுப்பும் கேள்வி .. Bhopal Encounter Fake? Video Shows Police Firing at SIMI Suspect


ஒரே செல்லில் எப்படி இவர்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள், இவர்கள் தப்பிக்கும் போது எப்படி ஒரே ஒரு காவல்துறை வீரர் மட்டும் தாக்கப்பட்டார், எப்படி தப்பித்து அத்தனை பேரும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள், எப்படி அவர்கள் அனைவரும் புதிய உடைகள், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் அணிந்திருந்தார்கள், சாப்பிடும் தட்டும் ஸ்பூன்களும் தான் அவர்கள் வைத்திருந்த ஆயுதம் என்றால் அவர்களை கைது செய்திருக்கலாம் தானே.... என்னமோ போங்க..... சிறையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராக்களின் பதிவை வெளியிட அரசு தயாரா?? வியாப்பம் மெகா ஊழலில் 60 பேரை தடையமின்றி கொலை செய்த மாநிலம் அல்லவா மத்திய பிரதேசம். விடியோவை நல்லா பாருங்க போலி என்கவுன்டர் ஸ்பெசலிஸ்டுகளின் ஒருவன் எப்படி தான் வைத்த இடத்தில் இருந்து கத்தியை கச்சிதமாக எடுக்கிறான் என்று, இன்னொருவன் கூறுகிறான் நாங்கள் இவ்வளவு பதட்டமாக இந்த வேலையை செய்யும் போது நீ என்னடா விடியோ படம் எடுத்துக்கிட்டு இருக்கனு..... இதை பார்க்கும் போது வீரப்பன் கொல்லப்பட்ட விதம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.. விசாரனை கைதிகளின் ஞாயங்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் தேர்தல் வரை இன்னும் எத்தனை காவல்துறை வீரர்களை, ராணுவ வீரர்களை போலி என்கவுண்டர்களில் அரசே வாக்குகளுக்காக பலி கொடுக்க போகிறதோ??  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக