செவ்வாய், 22 நவம்பர், 2016

6 மாதங்களாக 8 மாநிலங்களில் சொகுசுகார்களில் வாழ்ந்து வந்த மதன்!

எஸ்.ஆர். எம். மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் வாங்கித்தருவதாக கூறி 84 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக 123 பேர் வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து காசிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு கடந்த மே மாதம் 27ம் தேதி மாயமானார் மதன். பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அழுத்தம் கொடுக்கவே, விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு செல்லவே, மதனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டது. மதனைப்பிடிக்க கமிஷனர் தனிப்படை அமைத்தார். டிசி சுதாகரன் தலைமையில் ஏசி நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ்மில்லர், சரவணன், மஞ்சுளா உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில், மதன் வழக்கறிஞர் மூலமாக மதனிற்கு வேண்டப்பட்ட சுதிர், குணா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வடமாநிலங்களில் மதனை தீவிரமாக தேடினர். இதற்கிடையில் மதனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றம் கெடுபிடி கொடுத்தது.
இந்த போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சேகர், சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வந்தவர் மதனுடன் தொடர்புடையவர் என்று போலீசார் கண்காணித்தனர். அவர் பின் தொடர்ந்து சென்று மணிப்பூரில் கடந்த வாரம் கைது செய்தனர். சேகரின் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாநிலம் விட்டு மாநிலமாக இரண்டு சொகுசுகார்களில் மதன் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பதை அறிந்தனர்.

இதன்பின்னர் தனிப்படையினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தேடினர். அப்போது மதன் தமிழ்நாட்டில் இருப்பதாக சிக்னல் கிடைத்தது . சிம்கார்டு இல்லாத செல்போனில் வாட்ஸ் அப்பில் ஒருவருடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. வாட்ஸ் அப்பில் பேசியது திருப்பூர் சிக்னல் வந்தது. அந்த சிக்னலின்படி திருப்பூரில் வர்ஷா என்கிற தொழிலதிபர் மனைவி வீட்டை சுற்றி வளைத்தனர் போலீசார். வர்ஷா வீட்டில் சோதனை நடத்தினர்.

வர்ஷா செல்போன் மூலம் போலீசார் மதன் இருக்கும் இடத்தை அறிய முற்பட்டனர். இந்த முயற்சியில் திருப்பூரில் பூண்டி இடத்தை காட்டியது சிக்னல். அதன்படி அதிகாலையில் திருப்பூரில் பூண்டியில் கடந்த சனிக்கிழமை அன்று மதனை போலீஸ் கைது செய்தது. மதனிடம் போலீசார் விசாரித்ததில், கடந்த 6 மாதங்களாக, போலி நம்பர் பிளேட் கொண்ட 2 சொகுசு கார்களில் 8 மாநிலங்களில் வலம் வந்து, காருக்குள்ளேயே பெரும்பாலும் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. - அரவிந்த் nakkeeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக