வெள்ளி, 11 நவம்பர், 2016

ரூ.5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய சென்ற கேரள அரசு ஊழியர் கூட்ட நெரிசலில் சிக்கி சாவு

Man with Rs 5.5 lakh cash falls to death in Kerala
கன்னூர்: கேரள மாநிலம் திருவாங்கூர் பகுதியில் ரூ.5.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்ற நபர் நெரிசலில் சிக்கி மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பினராயி பகுதியை சேர்ந்த 48 வயதாகும் உன்னி, மின்வாரிய ஊழியராகும். இவர் தன்னிடமுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் அடங்கிய சுமார் ரூ.5.5 லட்சத்துடன், திருவாங்கூர் நகரிலுள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் 2வது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல கேரளா மற்றும் மும்பையில் தலா ஒரு முதியவர், கியூவில் நின்று பணத்தை மாற்ற சென்றபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக