செவ்வாய், 29 நவம்பர், 2016

மதன் வைத்திருந்த 32 கோடியில் பெரும்பாலும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்.. மோடி வரை நீண்ட மதனின் செல்வாக்கு!

நைட்டி-பாவாடையுடன் கைதான வேந்தர் மூவிஸ் மதனின் அரசியல் தொடர்புகள் இந்திய அளவில் மிகவும் வலிமையானவை. அதனால்தான் 179 நாட்கள் தலைமறைவு வாழ்க்கையில் பிடிக்க முடியவில்லை என அதிர்ச்சி தகவலை தருகிறார்கள் மதனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்துக் கொண்டிருக்கும் காவல்துறை வட்டாரத்தினர்.
"மணிப்பூர் மாநில முதல்வர் இக்ரம் இபோதிசிஸ், உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் தனிச் செயலாளர், கோவா மாநில அமைச்சர்கள் என மதனின் டெலிபோன் டைரி யை ஆராய்ந்தபோது கிடைத்த ஆச்சர்யங்கள் அதிகம்'' என்றும் கூறுகிறார்கள்.


மதன் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரிக்காக மாணவர்களை சேர்த்தவர், வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தவர். இது மட்டுமல்ல இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து சென்னையில் ஒரு பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தியவர். அதனால் அவருக்கு அரசியலில் எல்லாத் தரப்பிலும் தொடர்புகள் அதிகம். அந்த தொடர்புகள் தான் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்த உதவியது.<""மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் மதன் சமீபத்தில் 60 லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பண்ணை வீட்டில் அவரது காதலியான வர்ஷாவுடன் ஜாலியாக இருந்திருக்கிறார்.

 திருப் பூர் வீட்டில் பிடிபட்டபோது மதன் வைத்திருந்த ரூபாய் 32 கோடியில் பெரும்பாலானவை சமீபத்தில் வெளியான 2,000 ரூபாய் நோட்டுகள். இது அவருடைய நெட்வொர்க்கின் பலத்தை காட்டுகிறது'' என்கிறார்கள் காவல்துறையினர்.
மதனைப் பிடிப்பதில் தீவிரம் காட்டியது ஏ.சி. நந்தகுமார், டி.சி. சுதாகரன் தலைமையிலான ஸ்பெஷல் டீம். வெளிமாநிலங்களில் சுற்றிய மதனைத் தேடிக் கொண்டிருந்தபோது, மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் தன்னிடமுள்ள பணத்தை மாற்றுவதற்காக தமிழகம் வந்தபோது மதனைக் கைது செய்தோம் என்கிறது காவல்துறை. கைது தொடர்பாக தனிப்படை காவல்துறை துணை ஆணையர் சுதாகரன் நம்மிடம், ""திருப்பூர் பங்களாவில் மர்ம ஆசாமி இருப்பது உறுதி ஆகியும் உள்ளே சென்று தேடிய போது அவன் சிக்கவில்லை ஆனால் வர்ஷாவின் பதட்டம் எங்களுக்கு க்ளூ கொடுத்தது.

 வர்ஷாவிடம் இருந்த மதன் செல்போனுக்கு மணிப்பூரில் இருந்த சேகர் மெசேஜ் அனுப்பியதும் சவுண்டு கேட்டது. அதை வைத்து போனை பறிமுதல் செய்து விசாரித்ததில் மதனுடனான நெருக்கமான படங்கள் இருந்தன. மாடியில் மதனைத் தேடினோம். பின்னர் அங்கிருந்த லாஃப்ட்டில் உள்ள தனியறையை உடைத்து கைது செய்தோம்'' என்றார். >தலைமறைவான நாள்முதல் அவரது அம்மா தங்கம் அவரது மனைவிகள் சிந்து, சுமலதா ஆகிய யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசாத மதன். தனக்கு நெருக்கமான ஆண்-பெண் இருதரப்பிடமும் இண்டர்நெட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வாட்ஸ் அப் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளார்.<>"தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்' என கடிதம் எழுதிவிட்டு சென்னையிலிருந்து வாரணாசிக்கு போய் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து மறுநாள் அந்த ஓட்டலில் இருந்து ஒரு டூரிஸ்ட் காரை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்வதாகக் கிளம்பிய மதன், எங்கே எனத் தெரியவில்லை என போலீசார் சொல்லும் அளவிற்கு ஒரு சீனை உருவாக்கி விட்டு தலைமறைவான அவரைப் பற்றிய உண்மைகள், எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் ஆபீசில் கஸ்டடியில் வைத்து நன்கு கவனித்தபோதுதான் அவர் வாயாலேயே வெளிப்பட்டுள்ளது.

"வாரணாசியில் இருந்து ரூர்க்கி என்ற ஊருக்கு போன நான் அங்கேயே செட்டிலாயிட்டேன். அந்த ஊரில் ஒரு வீட்டையும் வாங்கினேன். வாழ்க்கையில் எப்போதும் ஏதாவதொரு பெண்ணின் துணை இல்லா மல் என்னால் வாழ முடியாது என்பதால், நடிகையான கீதாஞ்சலியை தொடர்பு கொண்டேன். கீதாஞ்சலி நான்கு துணை நடிகைகளுடன் அங்கு வந்தார். அவரது பயண ஏற்பாடுகளை சேகர் என்கிற எனது சினி ஃபீல்டு நண்பர் மூலம் செய்தேன்.

கீதாஞ்சலியும் நானும் சேர்ந்து கோவா வுக்கு ஜாலியாய் போனோம். எனது அம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுவை தாக்கல் செய்தார். அப்பொழுது சென்னை நகர கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் உறவினர். அவர் என்னைத் தேட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

;கோவாவிலும் நான் சொந்த வீடு வாங்கினேன். எனது தலைமறைவு வாழ்க்கை ஜாலியாகத்தான் போனது. நான் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் உள்ள செல்வாக்கான நபர்களை பணம் மற்றும் பெண் மூலம் எனது தொடர்புக்குள் கொண்டு வருவேன். கோவாவில் அமைச்சர் ஒருவரை எனது தொடர்புக்குள் கொண்டு வர எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படித்த பழைய மாணவர்களும் பா.ஜ.க. கட்சியின் தமிழக பிரமுகர் ஒருவரும் உதவினார்கள். அந்த அமைச்சரின் பாதுகாப்பில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.

<சென்னை நகர கமிஷனராக ஜார்ஜ் பொறுப்பேற்றதும் கோர்ட் நெருக்கடி களால், என்னைத் தேடிப் பிடிக்கச் சொல்லி அடிஷனல் கமிஷனர் ஷங்கர் தலைமையில் தனிப்படை அமைத்தார். முதலில் எனது உதவியாளர் சுதீரைப் பிடித்தார்கள். நான் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிக்கு வருடா வருடம் 50 சீட்டுகளை நிரப்பித் தருவேன். ஒவ்வொரு சீட்டுக்கும் 80 லட்சம் முதல் 1 கோடி வரை மாணவர்களிடம் வாங்குவேன். அதில் பாதி ரூபாயைத் தான் சுதீர் மூலமாக கல்லூரிக்குக் கொடுப்பேன். அந்த பணத்திற்காக கமிஷன் தொகையும் எனக்கு வரும். இதெல்லாம் எனக்கும் வேந்தர் பச்சமுத்துவுக்குமான நேரடி டீலிங். இப்படி சம்பாதித்த தொகையில், வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் சினிமா படம் எடுத்தேன். அந்த தொழி லில் பிரபல நடிகை ரவாளி எனக்கு பழக்கம் ஆனார். அவரை என் தொழிலுக்கு பணம் கிடைக்கச் செய்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தி னேன். இன்னும் பல நடிகைகளும் இந்த வி.ஐ.பி.க்களின் நட்பு வட்டத்தில் வந்தனர். அந்த நெருக்கமான நட்புக்கு அடையாளமான வீடி யோக்களும் உள்ளன. நான் ரவாளிக்கு சொந்த வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அதே நேரத் தில் நடிகை ரவாளியுடன் எனக்கு பக்க பலமாக இருந்தவர் நட்பு பாராட்டுவது அவரது குடும்பத் தில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. என்னுடனான தொடர்பையும் துண்டிக்க உத்தரவிட்டனர்.<">இதற்கிடையில், கல்லூரி நிர்வாகத்திலும் எனக்கு சிக்கல். எனக்குப் பதிலாக வேந்தரின் அண்ணன் மகன் அன்பு மூலமாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட்டன. நான் அன்புவை ஆள் வைத்து வெட்டினேன். அதைப் பற்றி போலீசில் புகார் செய்யவில்லை. ஆனால் வேந்தரின் மகன்கள் என்னை ஒதுக்கத் தொடங்கினார்கள். நான் இந்த ஆண்டு வசூல் செய்த தொகையோடு வேந்தர் மூவிஸ் பெயரில் 60 கோடி வரை வெளியில் கடன் வாங்கினேன். அதில் ஒரு தொகையை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில், சுதீர் மூலம் கட்ட வைத்தேன். அதை செல்ஃபோன் மற் றும் பேனா கேமரா மூலம் ரகசியமாக பதிவு செய்தேன். எனது ரகசிய பதிவை பற்றி கேள்விப்பட்டவர்கள் என்னிடம் பணம் வாங்கிய கல்லூரி மேலாளரை அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டார்கள்.<>எனது உதவியாளர் சுதீர் பிடிபட்டதும் கீதாஞ்சலி பற்றிய விவரம் போலீசுக்கு தெரிய வந்தது. உடனே நான் கீதாஞ்சலியை அனுப்பி விட்டு எனது காதலி வர்ஷாவுடன் மணிப்பூர் முதல்வர் இக்ரம் இபோதிசிஸ் உதவியுடன் மணிப்பூரில் குடியேறினேன்.

கீதாஞ்சலி சென்னை வந்ததும் அவர் மூலம் சேகரை பிடித்தனர். சேகரை வைத்து எனக்கு வலைவீசி வர்ஷா வீட்டில் பிடித்தனர்'' என்று மதன் வாக்குமூலம் தந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்ஷாவுடன் மதனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்குத் திருப்பூரில் துணிக்கடை ஒன்று வைத்து கொடுத்திருக்கிறார் மதன். கஸ்டடி விசாரணையில் மாட்டியுள்ள மதனிடம், எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட கல்லூரிகள் தொடர்பான பைனான்சியல் டீலிங்கை பட்டியல் போடுகிறது போலீஸ்.  மதன் கொடுத்துள்ள வாக்குமூலங்களினால் விரைவில் அடுத்தடுத்த ஜாக்பாட் கைதுகள் இருக்கும் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கையுடன். பலமான அரசியல் பின்னணிகள் இருப்பதால் மதனுடன் இந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளும் தீவிரமாகியுள்ளன.-தாமோதரன் பிரகாஷ், அரவிந்த்;படங்கள்: அசோக்

உல்லாசம்-மோசடி!
தனது பள்ளிப்பருவ தோழியான சிந்துவை 1996-ல் திருமணம் செய்து கொண்ட மதன். நாகர்கோவிலிலிருந்து பிழைப்பு தேடி சென்னை வந்தார். கல்லூரியில் சீட் வாங்கித் தரும் புரோக்கர் வேலையை ஆரம்பித்தார். அதன் மூலம் சினிமா எடுக்கத்தொடங்கினார். அப்போது சினிமாவில் ஹீரோயின் சான்ஸ் கேட்டு வந்த டி.வி.நடிகை சுமலதாவை இரண் டாவதாக திருமணம் செய்து கொண்டார். இப்போது வர்ஷா, அதற்கு முன்பாக கீதாஞ்சலி, இதற்கிடையில் மெர்சி என பல பெண்களுடன் திருவிளையாடல்களை ஜாம்ஜாம் என அரங்கேற்றியுள்ளார். மதனின் அம்மா தங்கம், 24-ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, “""மதனுக்கு பல பெண்களுடன் தொடர்பு என்பதில் உண்மை இல்லை. சிந்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாகத்தான் சுமலதாவைத் திருமணம் செய்து கொண்டான். பச்சமுத்துவின் மிரட்டலால் உயிருக்குப் பயந்து தான் தலைமறைவானான். மெடிக்கல் சீட்டுக்கு வசூலித்துக் கொடுக்க ஊக்கப்படுத்தியது பச்சமுத்துதான், அதே நேரத்தில் என் மகன் தப்பே செய்யவில்லை என நான் கூறவில்லை'' என தங்களது தரப்பு குறித்து விளக்கினார். ""எனது உறவுக்காரப் பெண்ணான வர்ஷா வீட்டில் என் கணவர் ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாது'' என்றார் 2-ஆவது மனைவி சுமலதா.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக