வெள்ளி, 11 நவம்பர், 2016

ஒரே நாளில் 3 லட்சத்துக்கு அதிகமானோர் மோடியின் முகநூலில் இருந்து விலகினர்.

நாடு முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக
பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி திடீர் அறிவிப்பு வெளியிட்டார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பலர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். அதேசமயம் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் நடுத்தர வர்க்க மக்கள் மகிழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த 3 லட்சத்துக்கு அதிகமானோர் ட்விட்டர் பக்கத்தில் மோடியை அன்ஃபாலோ செய்துள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் மோடியை பிந்தொடர்ந்தாலும் ஒரே நாளில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பின்வாங்கியது மோடி அரசின் முடிவுக்குக் கிடைத்த பின்னடைவாகவே கருதலாம். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக