டெல்லி சட்டப்பேரவை அவசரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் அரவிந்த் ஆதித்ய பிர்லா நிர்வாகக் கார்ப்பரேஷன் தனியார் நிறுவனத்தின் ஷுபேந்து
அமிதாப் வருமான வரித்துறைக்கு அளித்துள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி
பேசினார் அரவிந்த் கேஜ்ரிவால்.
கடந்த அக்டோபர் 2013-ல் நிலக்கரி சுரங்க முறைகேட்டு ஊழல் விசாரணையில்
ஆதித்ய பிர்லா குழுமத்தை சிபிஐ ரெய்டு செய்த பிறகு இந்த உண்மைகள்
தெரியவந்ததாக கேஜ்ரிவால் குறிப்பிட்டார். இந்த ரெய்டின் போது ஆதித்ய பிர்லா
குழுமத்தில் பெரிய அளவில் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இது
வருமானவரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
“நவம்பர் 16, 2012 தேதியிட்ட குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது அதில் குஜராத் முதல்வர் ரூ.25 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது, எனவே குஜராத் முதல்வருக்கு அப்போது ரூ.25 கோடி அளிக்கப்பட்டது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறையினரிடம் ஷுபேந்து அமிதாப் தெரிவிக்கும் போது இதெல்லாம் சொந்தக் குறிப்புகளே என்று கூறியுள்ளார்.
வருமான வரித்துறையினர் ஷுபேந்து அமிதாப்பை கேள்வி கேட்கும் போது, இவரோ அல்லது நிறுவனத்தின் எந்த ஒரு அதிகாரியோ கடந்த காலத்தில் குழுமத்தின் நிறுவனமான குஜராத் அல்காலி கெமிக்கல்சை குஜராத் சி.எம் என்று குறிப்பிட்டுள்ளார்களா என்று கேட்ட போது ஷுபேந்து அமிதாப் அந்த கேள்விக்கு மழுப்பினார்.
வருமான வரித்துறையினர் கைப்பற்றிய மற்றொரு ஆவணத்தில், புரோஜெக்ட் ஜே.என்விரான்மெண்ட் அண்ட் ஃபாரஸ்ட் தலைப்பில் ரூ.7.08 கோடி அளிக்கப்பட்டுள்ளதும் காட்டப்பட்டுள்ளது. இது ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது, இந்தக் காலக்கட்டத்தில் நவம்பர் 8, 2011 முதல் ஜூன் 17, 2013 வரை ஆதித்ய பிர்லாவின் ஒரு 13 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்துள்ளது.
இது குறித்து பிப்ரவரி 27, 2014-ல் வருமானவரித்துறை தனது அப்பிரைசல் அறிக்கையில் குஜராத் சிஎம் மற்றும் புரோஜெக்ட் ஜே பெயரில் பணம் கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பப் பட்ட போது ஷுபேந்து அமிதாப் நேரடியாக பதில் கூறாமல் மீண்டும் மழுப்பியுள்ளார்.
ரூ.500, ரூ.1000 நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும், ஏனெனில் இது மோசடியான ஒரு செயல்பாடு. மக்கள் பணம் வங்கிகளில் பாதுகாப்பாக உள்ளதா? ஏழை மக்கள் பணத்தை கொண்டு வந்து டெபாசிட் செய்த தொகைகள் இந்த வங்கிகளை பணக்காரர்களாக்கி விட்டது, இவர்களும் விஜய் மல்லையா போல் நாட்டை விட்டு ஓடி விடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்றார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானாத்துல்லா கான் “மனைவி, குழந்தைகள் இல்லாததினால் அவருக்கு குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியவில்லை.” என்றார். tamilthehindu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக