சனி, 12 நவம்பர், 2016

15-20 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சூப்பர் பவர்: ராஜ்நாத்சிங் ( ஆளுக்கு ஒரு பிளேன் வச்சிருப்பாய்ங்க)

லக்னோ: அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர்
பவராக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.  உ.பி., மாநிலம் லக்னோவில் நடைபெற்ற வர்த்தகர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் இந்தியா 15 முதல் 20 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக மாறும். உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இவை இரட்டை எண் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.    இவருக்கு இந்தியாவே அதானியும் அம்பானியும் தானே.... குஜராத் கும்பல் என்னவெல்லாம் பேசி மக்களை ஏமாற்றுது பாரு...


வெவ்வேறு வரி விகிதம்

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விகிதங்களில் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறன்றன. இருப்பினும் அரசுக்கு வருகின்ற வருமானம் 1.5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டில் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய வரி விகிதம் துவக்கப்பட உள்ளது.
இந்தியாவும் விதிவிலக்கல்ல

உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும் போது இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல இருப்பினும் அதனையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது என கூறினார்   தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக