செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஓ.பன்னீர்செல்வம் யார்மூலம் கவர்னரை அணுகினார் ? சசிகலாவை எப்படி கவிழ்த்தார்? மர்மதேசம் ?

ஜெயலலிதாவிடம் இருந்த பொறுப்புகள் எல்லாம் அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பமாக இருந்தது. எடப்பாடி இருந்த இடத்துக்கு பன்னீர் மாறியது எப்படி?
“முதல்வரிடம் இருக்கும் பொறுப்புகளை வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்க வேண்டும் என பேச்சு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கச் சொல்லி கவர்னர் மாளிகைக்கு அதிமுக தரப்பில் இருந்து சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த தகவல் போன மறுநாள் கவர்னரின் நண்பர் ஒருவர், அவரைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்குப் போயிருக்கிறார். அவரிடம் இதுதொடர்பாக கவர்னர் பேசியிருக்கிறார். ‘அவங்க சொல்றங்க… இவங்க சொல்றாங்கன்னு நீங்க ஒருத்தருக்கு பொறுப்பு கொடுத்தால் தேவை இல்லாமல் பிரச்னை வரும். அமைச்சரவையில் சீனியர் ஓ.பன்னீர்செல்வம்தான். அந்த அடிப்படையில் அவருக்குக் கொடுத்துடுங்க. அதையே காரணமாகவும் சொல்லிடுங்க. நாளைக்கு உங்களுக்கு எதுவும் சிக்கல் வராது’ என்று சொன்னாராம் அந்த நண்பர்.
அதன்படியே கவர்னர் பன்னீருக்குப் பொறுப்புகளை வழங்கிவிட்டார். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் பன்னீருக்கு அந்த பொறுப்புகள் வழங்கப்பட்டது என்பதையும் கவர்னர் தெளிவாக சுட்டிக்காட்டி விட்டார். அதனால் அமைதியாகி விட்டது சசிகலா தரப்பு. இதன் பின்னணியில் பன்னீர் எப்படி காயை நகர்த்தினார்  என்று யாருக்குமே சரியான விளக்கம் இல்லை என்று  .சொன்னார்கள் ராஜ்பவன் வட்டாரத்தில். கவர்னருக்கு இந்த ஐடியாவைக் கொடுத்த அவரது நண்பர் ஒரு அரசியல்கட்சியின் தலைவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக