ஞாயிறு, 16 அக்டோபர், 2016

திருட்டு கல்வி சான்றிதழ் ஸ்மிருதி இரானிக்கு சிக்கல்? மோடியே திருட்டு கல்வி சான்றிதழ் கொடுத்தவர்தாய்ன் கவலைப்பட வேண்டாம்ஜி

மின்னம்பலம்.காம்  : அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதிக்கான சான்றிதழை அக்டோபர் மாதம் 18ம் தேதிக்குள் சமர்பிக்க பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்த பிறகு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ப்பவர் ஸ்மிருதி இரானி. இவர் போலியான கல்வித் தகுதியை குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகையாளர் அஹமர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், ‘ஸ்மிருதி இரானி கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தபால் வழிக் கல்வி மூலம் 96-ம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இப்போது நீதிமன்ற தீர்ப்பின் படி ஸ்மிருதி இரானி நீதிமன்றத்தில் தன் கல்வி சான்றிதழை சமர்பிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக