சனி, 8 அக்டோபர், 2016

வியாபாரத்தைவிட அரசியல் பெரிய முதலீடாக உள்ளது: கி.வீரமணி!

என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி சார்பில் திராவிடர் கழக தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமாகிய கி.வீரமணியுடன் மாணவ – மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் நேற்று நடந்தது. அகாடமியின் இயக்குநர் விஜயாலயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “பெண்ணுக்கு சம உரிமை கிடைக்க பாடுபட்டவர் பெரியார். பதவி ஆசையே இல்லாத இயக்கம் பெரியார் இயக்கம். இப்போது எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும். எங்கு இருந்தால் லாபமாக இருக்கலாம் என்று சிந்தித்து பார்த்துதான் கட்சியில் சேருகிறார்கள். அவர்களுக்கு கொள்கைகளை பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த காலத்தில் வியாபாரத்தை விட அரசியல் பெரிய முதலீடாக உள்ளது. நாங்கள் எந்த பதவிக்கும் ஆசைப்படாததால், இதனை தைரியமாக சொல்கிறோம். மாணவ – மாணவிகளான நீங்கள் அறிவியலை படித்தால் மட்டும் போதாது. அறிவியல் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்” என்றார். பின்னர் மாணவ – மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக அரியலூர் மண்டல தலைவர் காமராஜ் மற்றும் மாணவ – மாணவிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.minnambalam,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக