வியாழன், 27 அக்டோபர், 2016

மிராகிள்.. ஜெயலலிதா நலமாகிவிட்டார்.. விரைவில் வீடு திரும்புவார்: சு.சுவாமி தகவல்

டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பி நலமாக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனவும், பாஜக ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி இன்று மதியம் வெளியிட்ட ஒரு டிவிட்டில், இத்தகவலை கூறியுள்ளார். "ஜெயலலிதாவின் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம். ஜெயலலிதா சுய நினைவுக்கு திரும்பிவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியென்றால், அது ஒரு அதிசயம்" என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.  ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உடனேயே, அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பதுதான் நல்லது என கருத்து கூறியவர் சுப்பிரமணியன் சுவாமி. முதலில் அவரது கருத்தை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் லண்டனிலிருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமிக்கு, ஜெயலலிதாவின் உடல் நல பிரச்சினையின் தீவிரம் குறித்து தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக