திங்கள், 31 அக்டோபர், 2016

அதிமுக ஆட்சியில் ஏராளமான பவர் சென்டர்கள் .. ஆளாளுக்கு ஊரை அடிச்சு உலையில் போடும் காரியம் மட்டுமே நடக்கிறது

ஹலோ தலைவரே, முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் படுத்திருக்கும் நிலையில், ஒரே வாரத்தில் ரெண்டாவது முறையா, கோட்டையில் அமைச்சரவை கூட்டம் நடந்திருக்குதே?''
""ஜெ. ஆக்டிவ்வா இல்லாவிட்டாலும் அவரது அமைச்சரவை ஆக்டிவ்வா இருக்குதே!''‘""24-ந் தேதி மாலை 5 மணிக்கு கூடிய அமைச்சரவைக்  கூட்டம், ஏறத்தாழ ஒன்றேகால் மணிநேரம் நடந்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோப்புகளில் கையெழுத்து பெறும் வைபவமாகத்தான் இந்தக் கூட்டம் நடந்திருக்கு. டீ, ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி, அமைச்சர்கள் பொதுவான விசயங்களையே அங்க கலந்துரையாடி இருக்காங்க. உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் கொடுப்பதற்காகத்தான் முக்கியமாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தயாரித்த  உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பட்டியலுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கு. இப்படி மாநிலத்தின்  அவசரத் தேவைகளைக் கருதி அமைச்சரவை கூட்டப்பட்டாலும், மத்திய அரசின் ராஜதந்திரமான மூவ்களால், அதற்குச் சாதகமான சில ஒப்புதல்களும் இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கு.''’’""சந்தில் சிந்து பாடும் பா.ஜ.க.ன்னு போன முறையே நாம பேசியிருக்கோமே.''…’


""மத்திய அரசின், ஜி.எஸ்.டி. மசோதா போன்ற சில திட்டங்களுக்கு ஜெ. உடன்படாமல் இருந்தார். இதுபோல் ஜெ.’ ஏற்காத மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், அவர் மருத்துவமனையில் இருக்கும் நேரத்திலேயே, தமிழக அரசை ஏற்கச்செய்யணும்னு, காய்கள் நகர்த்தப்படுதாம். உதாரணமாக, மத்திய அரசு, மின்துறை சீர்திருத்தம் என்கிற பெயரில், "உதய்' திட்டத்தைக் கொண்டுவந்தது. இதில் மாநில அரசு சொல்லும் திருத்தங்களை நிறைவேற்றணும்னு மத்திய அமைச்சரிடம் வாக்குறுதி கேட்டதோடு, அப்படி செய்தால், மத்திய அரசு கூட்டும் அடுத்த மின்சாரத்துறை ஆலோ சனைக் கூட்டத்தில் தமிழகப் பிரதிநிதிகள் கலந்துக்கு வாங்கன்னு ஜெ. சொல்லியிருந் தார்.  இதற்கிடையே ஜெ.’ அப்பல்லோவில் அட்மிட்டான நேரத்தில், மத்திய அரசு இந்த மின்துறையின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. அதில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் கலந்துக்கிட்டாங்க.. இதைத் தொடர்ந்து, "உதய்' திட்டத்தில் தமிழகம் இணைஞ்சதா மத்திய அரசு அறிவிச்சிருக்கு. மாநில அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியிருக்குது.''  ""அதாவது, ஜெ. அட் மிட்டாகியிருக்கிற நேரத்தில் ஒப்புதல் தரப்பட்டிருக்குது!''""ஆமாங்க தலைவரே... அதுமட்டுமல்ல. மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை பல மாநிலங்களும் எதிர்க்குது. தமிழகத்திலும் எதிர்ப்புக்குரல் பலமாக இருக்கு. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள்னு பல தரப்பிலும் எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. இந்த கல்விக் கொள்கைக்கும் இப்ப நடந்த தமிழக அமைச்ச ரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கு. இது தொடர்பான அறிவிப்பை அரசு வெளி யிடுறப்பதான், அந்தக் கல்வித் திட்டம், எந்த அளவுக்கு மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கு? அதன் சாதக பாதகம் என்னங்கிற தெல்லாம் தெரியவரும். இப்படி ஜெ.’ மருத்துவமனையில் இருக்கும் தருணத்தை பயன்படுத்தி, தான் நினைத்த காரியத்துக்கெல்லாம் தமிழக அரசை ஒப்புதல் கொடுக்கவைக்குது மத்திய அரசு. இதுதான் மோடி அரசின் சந்துல சிந்து பாடும் வேலை.''’


""ஆட்சியும் கட்சியும் இப்ப சசிகலா கையில்தானே இருக்கு. அவர் எப்படி இதற் கெல்லாம் சம்மதிக்கிறார்?''’""


அவர் மத்திய அரசிடம் இறுக்கத்தைக் காட்ட யோசிக்கிறார். காரணம் வழக்கத்துக்கு மாறாக அ.தி.மு.க.வில் இப்ப, தனித்தனி அணிகள் வெளிப்படையாவே செயல்பட ஆரம்பிச்சிருக்கு. குறிப்பா, சசிகலா தலைமையில் ஒரு பலமான டீம் இருப்பது போல,
 முதல்வரோட இலாகாக்களை வைத்திருக்கும் ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு டீமும், கொங்கு மண்டலத்தை ஆர்கனைஸ் பண்ணும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு டீமும் இருக்கு. கொங்கு டீமுக்கு செங் கோட்டையன் போன்ற அனுபவ சாலிகளின் வழிகாட்டல் இருக்கு. 

ரொம்பவும் பவ்யம் காட்டும் ஓ.பி.எஸ்.சுக்கு தம்பிதுரைதான் ஆலோசனைகளைச் சொல்லிக் கிட்டிருக்காராம்.. அவர் மூலம் தமிழக அரசின் லகானை கைல வச்சிக்க முயற்சி பண்ணுது மோடி அரசு. அதனால் மோடியை இப்ப எதிர்த்தால், அது தனக்கும் தன் பவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்த லாம்ன்னு சசிகலா கொஞ்சம் சைலண்ட்டா இருக்கார்.''’’

 ""டெல்லியைப் பகைச்சுக்க முடியாவிட்டாலும் ஸ்டேட் நிர்வாகத்தை டைட்டா வச்சுக்கலாமே?''’""

நிர்வாகம் சசிகலா கண்ட்ரோலில் இருந்தாலும், உத்தரவுகள் எல்லாம் முதல்வரின் ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன் விருப்பப்படிதான் நிறைவேறுதாம். 

ஷீலா மூலமாக, தலைமைச் செயலாளருக்குப் போய், அவர் வழியாகவே, ஏனைய உயர் அதிகாரிகளுக்குப் போய்ச் சேருது. ஒவ்வொரு கோஷ்டி தரப்பிலும்-உயரதிகாரிகள் தரப்பிலும் பவர் சென்டர்கள் உருவாகியிருப்பதால,   கோட்டையில் ஆரம்பிச்சி, இப்போ அங்கங்கே பரவலா கலெக்ஷன்கள் வேகமெடுத்திருக்கு.

போஸ்டிங்குகள், டிரான்ஸ்பர்கள், புரமோசன்கள், காண்ட்ராக்ட்டுகள்ன்னு ஆளாளுக்குக் கல்லா கட்டறது ஜெ. நிர்வாகத்திலும் ஸ்பீடாத்தானே இருந்தது?

இப்ப இன்னும் ஸ்பீடுங்க தலைவரே.. யாருக்கும் கப்பம் கட்டாம முழு கலெக்ஷனையும் மொத்தமா பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. மந்திரிகளுக்குத் தெரிஞ்சும் தெரியாமலும், அவர்களின் பி.ஏ.க்கள், செயலாளர்கள்ன்னு எல்லோரும் முடிஞ்சவரை சுருட்டறாங்க. உதா ரணத்துக்குச் சொல்லணும்ன்னா, கொங்குமண்டல பவர்புல் அமைச்சரின் மணியான பி.ஏ., அமைச்சருக்கு தீபாவளி பரிசா 10 கோல்ட் காயின் வீதம் பில்லோட வாங்கி அனுப்புங்கன்னு, தமிழகம் முழுக்க இருக்கும் துறை அதிகாரிகள்ட்ட மொய் வசூல் பண்ணிக்கிட்டு இருக்கார். 


அதேபோல் இளவரசியின் சகோதரர்களையும் மகனையும் வச்சிக்கிட்டு ஒரு கும்பல், அதை முடிச்சித் தர்றோம். இதை முடிச்சித் தர்றோம்ன்னு பரபரப்பா காரியம் சாதிக்குது. இதுமாதிரியே  தமிழக உயர் அதிகாரி ஒருவரோட மகன், அண்ணாநகரில் ஆபீஸ் போட்டுக்கிட்டு, மின்துறை போஸ்டிங்குகளில் விவேகமா செயல்பட்டுக்கிட்டிருக்கார். இவர் இப்படின்னா,  முதல்வரின் செயலாளர்களில் ஒருவர் ஈ.சி.ஆர். பங்களா ஒன்றில் இருந்துக்கிட்டு, பல சந்திப்புகளை நடத்தி வெயிட்டா காரியம் சாதிச்சிக்கிறார். இப்படி அரசாங்க காரியங்களை மையமா வச்சி வசூல்வேட்டை நடத்தற மாதிரியே, இன்னொரு பக்கம் அப்பல்லோவைக் காரணம் காட்டியும் வசூல் மேளா நடக்குது.

'’""அப்பல்லோவைக் காட்டியா?''’""

ஆமாங்க தலைவரே, அப்பல்லோவிலிருந்து அம்மா நல்லபடியா கார்டனுக்கு திரும்பணும்னு பல அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், யாகங்கள்ன்னு நடத்தறதா சொல்லி, ஆளாளுக்கு பெரிய அளவில் வசூல் பண்றாங்க. உள்ளாட்சித் துறை, சமூக நலத் துறைன்னு பல துறைகள் சார்பாகவும் மந்திரிகள் பேரைச் சொல்லியே அதிகாரிகள் தரப்பில் வசூல் பலமா நடக்குது.  சென்னை மாநகராட்சியில் பணி நீட்டிப்பில் இருக்கும் சூப்பிரன்டெண்ட் என்ஜினியரான நந்தகுமார், மாநகராட்சியில் இருக்கும் ஒவ்வொரு மண்டலமும் ஒரு கோடி ரூபாய் வீதம், பூஜை செலவுகளுக்கு மொய் எழுதணும்னு வசூல் நடத்தறதா, மாநகராட்சி அதிகாரிகளே புலம்பறாங்க. இது சம்பந்தமா, நந்தகுமாரிடம் கேட்டால், முதல்வர் நலமடையணும்ன்னு ஆசைப்படுறேன். ஆனா நானா யாரையும் வற்புறுத்திப் பணம் கேட்பதில்லைன்னு சொல்றாரு. இவரைப் போலவே சமூகநலத்துறை அமைச்சரான சரோஜாவின் தம்பின்னு சொல்லிக்கிற ரமேஷ் என்ற நபர், ஆர்.கே. நகரில் இருக்கும் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டிலேயே தங்கியிருந்து கலெக்ஷன் பண்றதா புகார் கிளம்பியிருக்குது.''’
 


""உடல்நிலை கூட வசூலுக்கு மூலதனம்தானா? 

என்ன அரசியலோ.. என்ன நிர்வாகமோ?''’"

"தலைவரே… ஆளுங்கட்சியில் பல பவர் சென்டர்கள் உருவாவதால, அங்க இருக்கும் பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் திசை தெரியாமல் முழிச்சிக்கிட்டு இருக்காங்க. அ.தி.மு.க.வில் சசிகலா ஆதிக்கத்துக்கு எதிரா வரிஞ்சி கட்டும் சசிகலா புஷ்பாவை, இப்பவும் 6 மந்திரிகள் தொடர்புகொண்டு பேசிக் கிட்டுதான் இருக்காங்க. "நாங்க சொல்ல நினைக்கிறதை எல்லாம் நீங்க தைரியமாவும் பகிரங்கமாவும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நீங்க சசிகலாவுக்கு எதிரா வாய்ஸ் கொடுக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எங்களுக்கு அவங்க தரப்பின் நெருக்கடிகள் கொஞ்சம், குறைஞ்சிருக்கு. எங்களால் எங்க  துறையில் தைரியமா முடிவெடுத்துச் செயல்பட முடியுது'ன்னு சொல்லும் மந்திரிகள், இடைத் தேர்தலில் வேட்பாளர்களுக்குக் கட்சி சார்பில் கொடுக்கப்பட இருக்கும் பி.பார்மில், ஜெ’வைப் போல் போலி கையெழுத்துப் போட முயற்சிப்பாங்க. அதை நீங்கதான் தட்டிக்கேட்கணும்ன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு சசிகலா புஷ்பா, "கட்சிக்கு பாதகமான எந்த செயலையும் செய்யமாட்டேன். சசிகலா ஆதிக்கத்தை எதிர்ப்பது மட்டும்தான் என் நோக்கம்'ன்னு சொல்லியிருக்கார்.'' ""ஓ.. இதுக்குப் பேருதான் அரசியல் தர்மமா?''""இந்த நிலையில் கட்சிக்குள்ளிருக்கும் எந்த அணியிலும் சிக்காமல் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. அப்படிப்பட்டவங்க மேலதான் சீனியர்கள் உள்பட பலரது பார்வையும் பதிஞ்சிருக்குது. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி தலைமையிலான விங்க் இவர்களை உன்னிப்பா கவனிக்குது., தன்னிச்சையா செயல்படும் எம்.எல்.ஏக்கள் திடீர்னு தனி குரூப்பாகி, எதிர்க்கட்சிப் பக்கம் போயிடலாம்ங்கிற பயமும் ஆளுந்தரப்புக்கு இருக்குது. பொன்னையன், பண்ருட்டியார், தம்பித்துரை, மதுசூதனன் போன்ற சீனியர்கள் இது பற்றி சீரியஸா டிஸ்கஸ் பண்ணியிருக்காங்க. 30 எம்.எல்.ஏக்களுக்கும் ஏதாவது ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமான்னும் மேலிடத்தில் ஆலோசனை நடந்திருக்குது. இந்த விஷயம் லேசா லீக் ஆனதால, தங்கள் மேலே தாக்குதல் நடத்தப்படலாம் அல்லது தங்கள் வீடு குறி வைக்கப் படலாம்னு உயிர் பயத்தில் இருக்காங்க.''’‘""அ.தி.மு.க.வின் எல்லாத் தரப்பிலும் அலர்ட்னெஸ் தெரியுது. கார்டன் ஏரியா எப்படி இருக்குது?''""அதை நான் சொல்றேன்.. போயஸ் கார்டனில் போலீஸும் உளவுத்துறை ஆட்களும் குவிக்கப்பட்டிருக்காங்க. நீண்ட காலமாக அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு எஸ்.பி., 2 டி.எஸ்.பி. உள்ளிட்ட 7 பேர் கொண்ட டீமை, அதிரடியாக வெளியேற்றிட்டாங்க.  கார்டன் சார்பில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஐ.டி.கார்டை பறிச்சிக்கிட்டுதான்  அனுப்பி யிருக்காங்க. காரணம், கார்டனில் காணப்படும் நடமாட்டம்,  லிப்ட், ஏ.ஸி. தொடர்பான பணிகள், அங்கே வந்து வந்து போகும் கண்டெய்னர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் லீக் ஆனதால்தான், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்குதாம்.''நக்கீரன்,இன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக