வெள்ளி, 7 அக்டோபர், 2016

வாட்ஸ் அப் மிமிக்ரி வாய்ஸ் யார்? மன்னார்குடியை தவிர வேறு யாருக்கு அந்த தைரியம் வரும்?

மருத்துவமனையிலிருந்து ஜெ. பேசுவது போல ஒரு வாட்ஸ் அப் ரிக்கார்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதை தயாரித்தது அ.தி.மு.க. தலைமைதான். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் மூலம் தயாரான அந்த வாட்ஸ் அப் ரிக்கார்டை ஜெயா டி.வி.யில் ஒலிபரப்ப திட்டமிட்டிருந்ததாகவும், அதே நாளில் ஜெ.வுக்கு சுவாசக் கருவி பொருத்தியிருப்பதை அப்பல்லோ வெளிப்படுத்தி விட்டதால் கடைசியில் ஒலிபரப்ப வேண்டாமென்றும் டி.வி. நிர்வாகம் விட்டுவிட்ட நிலையில் யாரோ வெளியிட்டு விட்டார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உள்வட்டத்தினர்.
அப்பல்லோவில் யாகம்?
டி.டி.வி.தினகரன், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், அவரது சகோதரி டாக்டர் ராஜ மாதங்கி உட்பட மன்னார்குடி குடும்பத்தினர் ஜெ.வை கவனித்துக் கொள்ளும் சசிக்கு உதவியாக அப்பல்லோவில் தங்கி இருக்கிறார் கள். சசிகலா மட்டும் இரண்டு நாட் களுக்கு ஒருமுறை போயஸ் கார்ட னுக்கு சென்று வருகிறார். கடந்த 4-ம் தேதி மாலை யாகம் நடத்த விறகுக் கட்டைகளோடு ஒரு புரோ கிதர் சசிகலாவால் அப்பல்லோவுக்கு அழைத்து வரப்பட்டார்.
செவ்வாய் இரவு 8 மணிக்கு அப் பல்லோவில் இருந்து புறப்பட்ட சசிகலா மீண்டும் 9.50 மணிக்கு திரும்பினார். திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் 04ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு அப்பல் லோவிலிருந்து கிளம்பி வெளியே சென்றவர், மீண்டும் 9.58க்கு உள்ளே சென்றார். ஊதா கலர் சட்டை போட்ட ஒருவரை இறக்கி விட்டுவிட்டு 10.00 மணிக்கு அப்பல்லோவிலிருந்து வெளியேறுகிறார்.
டாக்டர்கள் விவாதத்தில் "நக்கீரன்'!
ஜெ.வின் மருத்துவக் குறிப்புகளை பற்றி விவாதிக்கும் அறிக்கைகளில் மருத்துவர்கள் "நக்கீரனை படித்தீர்களா?' என ஒரு இடத்தில் கேட்கிறார்கள். ஜெ.வுக்கு ஏற்பட்டிருப்பது நுரையீரல் தொற்று தான் என முதலில் சொன்ன பத்திரிகை நக்கீரன்தான். அதேபோல் ஜெ.வின் உடலில் சர்க்கரை அளவு அளவுக்கதிகமாக இருக்கிறது என்று சொன்னதோடு ஜெ.வுக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. அவரது இதயம், கிட்னி, கல்லீரல் நன்றாக இயங்குகிறது என்பதோடு... அவர் செயற்கை சுவாச கருவிகளு டன்தான் அனுமதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து இருக்கிறார் என நக்கீரன் சொன்னதைதான் மருத் துவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்.நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக