வெள்ளி, 28 அக்டோபர், 2016

துரோகம் ... ஜெ' எதிர்த்த உணவு மசோதா தமிழகத்தில் அமலாகிறது! ஜெயாவுக்கு குனிந்து குனிந்து... இப்போ மோடிக்கும் குனிந்து குனிந்து தமிழக உரிமைகளை தாரை வார்க்கும் பன்னீரு~!


மின்னம்பலம்,காம்  :கடந்த காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் ஆட்சியில் 06-05-2013 அன்று நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்த்தன. இதில் மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் ரேஷன் சிஸ்டத்தை இல்லாமல் ஆக்கிவிடும் திட்டம் இது என்று கடுமையாக எதிர்த்த நிலையில் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 02-08-2013ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் “இம்மசோதா குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது .இந்தியா போன்ற கூட்டாட்சி நடக்கும் நாட்டில், மாநிலங்களுக்கே மக்களுடன் நெருங்கிய மற்றும் மறைமுக தொடர்புகள் உள்ளன. எனவே உணவு பாதுகாப்பு மசோதா போன்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கே அளிக்க வேண்டும். மேலும் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட முயற்சிக்க வேண்டாம்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மசோதாவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் அறிக்கை போர் நடந்தது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதியில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் எதிர்ப்பு தெரிவித்த உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது போல இப்போது உணவு பாதுகாப்பு மசோதா நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் அறிமுகம் ஆகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது நடைமுறையில் இருக்கும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு ஆயிரத்து ரூபாய் 193 கோடியே 30 லட்சம் கூடுதல் செலவாகும் என்றும், இதனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இச்சட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, 3 முதல் 10 நபர் வரை கொண்ட குடும்பங்களுக்கு தற்போது 20 கிலோ அரிசி வழங்கப்பட்டுவரும் நிலையில், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி இனி அந்த அளவு அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி 5 உறுப்பினர்கள் உள்ள குடும்பத்துக்கு இனி 25 கிலோ அரிசியும், 6 பேர் கொண்ட குடும்பங்களுக்கு இனி 30 கிலோ அரிசியும் 7 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், 8 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 40 கிலோ அரிசியும், 9 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 45 கிலோ அரிசியும், 10 பேர் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக