ஞாயிறு, 23 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பா : போயஸ் கார்டனில் இருந்து ஆவணங்கள் கடத்தப்படுகின்றன , மத்திய படை பாதுகாப்பு வழங்க வேண்டும்

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
நிலையில், அவரது போயஸ் கார்டனில் இருந்து முக்கிய ஆவணங்கள் கடத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சசிகலா நடராஜன் பற்றி பேசுவதால் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக கூறிய அவர், தனக்கு எது நடந்தாலும் சசிகலா நடராஜனே பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, “ஏற்கனவே போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் முக்கியமான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, அவரது இல்லத்துக்கு மத்திய படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நான் அதிமுக எம்.பி-யாகவே இருந்தாலும் எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் என்னைப் பற்றி அவதூறான செய்திகள் வருகின்றன. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனால்கூட, அது சசிகலா நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தாரால் நடத்தப்பட்டதாகத்தான் இருக்கும். நான் சசிகலா நடராஜன் பற்றி ஏற்கனவே கூறியதால்தான் அவர், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. என்னை கைதி போல நடத்திய துணை சபாநாயகர் தம்பிதுரை மீது நாடாளுமன்ற உரிமை குழுவில் புகார் அளிக்க உள்ளேன்” என்று கூறினார்.மினன்ம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக