செவ்வாய், 25 அக்டோபர், 2016

தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது: சென்னை ஐகோர்ட் ..இடியமின் ஹிட்லர் எல்லாம் பிச்சை வாங்கணும்

சென்னை: பேச்சுரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தனிமனித
விமர்சனங்களை ஏற்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளான நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் உடல்நிலை குறித்து தங்களுக்கு பேஸ்புக்கில் வந்த தகவலை மட்டுமே பகிர செய்தோம். ஆனால் அதிமுக நிர்வாகியின் பெயரில்போலீசார் தங்களை துன்புறுத்தி வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தை முடக்கிவைத்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற எண்ணமில்லை. போலீசாரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர். அப்போது போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களுக்கு, இடையூறு செய்யப்படவில்லை. கருத்துரிமை என்ற பெயரில் முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. துன்புறுத்தல் இல்லாமல் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.
பதிவுகள் நீக்கப்பட்டு, பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, நீக்கப்பட்டதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.ராஜேந்திரன், அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனை கொண்டு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. இதுபோன்ற கருத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக