வெள்ளி, 7 அக்டோபர், 2016

வெமுலா சகோதரர் குற்றச்சாட்டு : மந்திரிகள், பல்கலைக் கழக துணை வேந்தரை காப்பாற்றுகிறது நீதிபதி அறிக்கை

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற
மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார் என கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலக கோரி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ரோகித் வெமுலா தற்கொலை குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நேற்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது.


வெமுலா தற்கொலைக்கு தனிப்பட்ட விரக்தியே காரணம் என்றும் அரசியல் அழுத்தல் அல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நீதிபதிகளின் இந்த அறிக்கை மந்திரிகள், பல்கலைக் கழக துணை வேந்தரை காப்பாற்றுகிறது என்று ரோகித் வெமுலா சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து சகோதரர் ராஜா வெமுலா கூறியதாவது:-

முழு அறிக்கையும் பாரதீய ஜனதா மத்திய மந்திரிகள், ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மற்றும் ஏபிவிபி உறுப்பினர்கள் ஆகியோரை காற்றுவதற்காகவே உள்ளது.

மாவட்ட நீதிமன்றம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியவை என்னுடைய சகோதரர் எஸ். சி. தான் என்பதை தெளிவு படுத்துகிறது.

தற்போதையை அரசு இந்த விவகாரத்தை திசை திருப்பவே முயல்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக